பத்தரமுல்ல சீலரத்ன தேரருக்கு நேர்ந்த சோகம்: விகாரையில் வைத்து நடந்த தாக்குதல்!

ஜன சேதா பெரமுனவின் தலைவரான பத்தரமுல்ல சீலரத்ன தேரர், அடையாளம் தெரியாத நபர்களால் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் அவர் தற்போது கம்பஹா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

விகாரையில் இடம்பெற்ற கூட்டமொன்றின்போது இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இறுதிச்சடங்கு நிகழ்வொன்றை ஏற்பாடு செய்வது தொடர்பில் கலந்துரையாடுவதற்காக குறித்த கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

தாக்குதலில் காயமடைந்த சீலரத்ன தேரர் கம்பஹா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், தற்போது அங்கு தங்கியிருந்து சிகிச்சை பெற்று வருவதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

தாக்குதலின் பின்னர் சம்பவத்துடன் தொடர்புடையதாகக் கூறப்படும் சந்தேகநபர் அப்பகுதியிலிருந்து தப்பிச் சென்றுள்ளதாகவும், அவரைக் கைது செய்வதற்காக பல விசேட காவல்துறையினர் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது

தாக்குதலுக்கான உறுதியான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில், சம்பவம் தொடர்பில் வீரகுல பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

arushuna
அர்ச்சுனாவின் எம்.பி பதவியை ரத்து செய்யக்கோரும் மனு: வழக்கு விசாரணையில் புதிய திருப்பம்!
ravikarunanayake
தேசிய லொத்தர் சபை முறைகேடு வழக்கு: நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க கைது!
jaffna
வீட்டுத் தாக்குதல் குற்றச்சாட்டு: வடமராட்சி தென் மேற்கு பிரதேச சபை உறுப்பினர் இராஜினாமா
jaffna
யாழ்ப்பாணத்தில் பரபரப்பு: நீதிமன்ற தீர்ப்பு வழங்கப்பட்ட மறுநாளே போதனா வைத்தியசாலையில் இருந்து கைதி தப்பியோட்டம்!
JaffnaNews
யாழ்ப்பாணம் தென்னிந்திய திருச்சபை பிரதித் தலைவர் போதகர் அன்டனி செபஸ்டியன் மீது தாக்குதல்: வைத்தியசாலையில் அனுமதி!
MotherLove
தாயைப் பிரிந்த துயரம்: யானை சிலையைத் தன் தாய் என நம்பி மணிநேரமாக நின்ற குட்டி யானை!