கொழும்பு பல்கலைக்கு எதிராக 5 மில்லியன் வழக்கு! 8 பேருக்கு அதிரடி அழைப்பாணை!

கொழும்பு பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ மற்றும் நிதிப் பீடத்தின் உயர் டிப்ளோமா கற்கை நெறி மாணவர் ஒருவர், பரீட்சை முறைகேடுகள் காரணமாக தனக்கு ஏற்பட்ட கால விரயம் மற்றும் பாதிப்புக்களுக்காக 5 மில்லியன் ரூபாய் நஷ்டஈடு கோரி நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்துள்ளார்.

நுகேகொடை மாவட்ட நீதிபதி ஆர்.ஏ.என். ராஜபக்சவின் உத்தரவுக்கு அமைய, கொழும்பு பல்கலைக்கழகத்தின் தற்போதைய துணைவேந்தர், முன்னாள் துணைவேந்தர், பீடாதிபதி, திணைக்களத் தலைவர் மற்றும் விரிவுரையாளர்கள் உள்ளிட்ட எட்டு பேருக்கு எதிர்வரும் செப்டம்பர் 10 ஆம் திகதி நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.

குறித்த கற்கை நெறியின் சில பாடங்களில் சித்தியடையவில்லை என அறிவிக்கப்பட்ட மாணவர்கள், எந்தவித மீள் பரீட்சையும் இன்றி பின்னர் எவ்வாறு சித்தியடைந்ததாக மாற்றப்பட்டனர் என்பது தொடர்பில் நீதிபதி கேள்வி எழுப்பியுள்ளதுடன், இது குறித்த விளக்கங்களை மன்றில் சமர்ப்பிக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.

பரீட்சை வினாத்தாள் கசிவு, முறையற்ற புள்ளியிடல் மற்றும் கையூட்டல் கோரியமை போன்ற குற்றச்சாட்டுக்களை மனுதாரர் முன்வைத்துள்ளார்.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

arushuna
அர்ச்சுனாவின் எம்.பி பதவியை ரத்து செய்யக்கோரும் மனு: வழக்கு விசாரணையில் புதிய திருப்பம்!
ravikarunanayake
தேசிய லொத்தர் சபை முறைகேடு வழக்கு: நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க கைது!
jaffna
வீட்டுத் தாக்குதல் குற்றச்சாட்டு: வடமராட்சி தென் மேற்கு பிரதேச சபை உறுப்பினர் இராஜினாமா
jaffna
யாழ்ப்பாணத்தில் பரபரப்பு: நீதிமன்ற தீர்ப்பு வழங்கப்பட்ட மறுநாளே போதனா வைத்தியசாலையில் இருந்து கைதி தப்பியோட்டம்!
JaffnaNews
யாழ்ப்பாணம் தென்னிந்திய திருச்சபை பிரதித் தலைவர் போதகர் அன்டனி செபஸ்டியன் மீது தாக்குதல்: வைத்தியசாலையில் அனுமதி!
MotherLove
தாயைப் பிரிந்த துயரம்: யானை சிலையைத் தன் தாய் என நம்பி மணிநேரமாக நின்ற குட்டி யானை!