இலங்கையைப் பிறப்பிடமாகக் கொண்ட பரா ரூமி, சுவிட்சர்லாந்து தேசிய பேரவையின் 2ஆவது துணைத் தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

1991 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 28 ஆம் திகதி அன்று கொழும்பில் பிறந்த இவர், தனது 6 ஆவது வயதில் பெற்றோருடன் சுவிட்சர்லாந்துக்கு குடிபெயர்ந்து, தாதியர் சேவையில் பட்டமும் பெற்றுள்ளார்.
2021 ஆம் ஆண்டு (Solothurn) மாநில கண்டோனுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு அரசியல் பயணத்தை ஆரம்பித்தார். 2023 ஆம் ஆண்டு சுவிட்சர்லாந்து பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு, பாராளுமன்ற உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டார். இதன் மூலம் சுவிட்சர்லாந்து பாராளுமன்றத்திற்குத் தெரிவான முதல் இலங்கை வம்சாவளி நபர் என்ற பெருமையைப் பெற்றார்.
தனது புதிய பதவி குறித்து பரா ரூமி,
”எனது புதிய பதவியில் தேசிய கவுன்சிலின் துணைத் தலைவராக நான் ஒவ்வொரு நாளும் புதிய அறிவுகளைப் பெறுகிறேன். ஜனாதிபதி இல்லாத நிலையில் 2 முறை கவுன்சிலை வழிநடத்த எனக்கு அனுமதி வழங்கப்பட்டது. ஒரு கடினமான மற்றும் பொறுப்பான பணி. இது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது” எனக் குறிப்பிட்டுள்ளார்.
