பிரித்தானியாவின் புதிய குடிவரவுச் சட்டம்: இலங்கை குடும்பமொன்றை நாட்டை விட்டு வெளியேற உத்தரவு

பிரித்தானியாவில் புதிய குடிவரவு சட்டத்திற்கு அமைய அங்கு வசிக்கும் இலங்கை குடும்பம் ஒன்று நாட்டை விட்டு வெளியேற வேண்டிய நெருக்கடி நிலைக்கு முகங்கொடுத்துள்ளது.

பிரித்தானியாவில் புலம்பெயர் பராமரிப்புப் பணியாளர்களின் ஐந்து வயதுக்குட்பட்ட சிறு சிறுவர்களை நாட்டை விட்டு வெளியேற்ற உள்துறை அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

அதற்கமைய பிரித்தானியாவில் தொடர்ந்து தங்குவதற்கு பெற்றோருக்கு விசா நீடிப்பு மற்றும் அனுமதி வழங்கப்பட்டுள்ள போதிலும், அவர்களின் சார்ந்திருப்போரை நாட்டை விட்டு வெளியேறுமாறு கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளன.

இதற்கமைய இலங்கையை சேர்ந்த வருணி அரச்சிகே என்ற பெண் ஸ்கொட்லாந்தில் பராமரிப்புப் பணியாளராக பணிபுரிந்து வருகிறார்.

குறித்த பெண்ணுக்கு 2031ஆம் ஆண்டு வரை விசா நீடிக்கப்பட்டுள்ள போதிலும், அவருடைய கணவர் மற்றும் 8, 5 வயது குழந்தைகளை நாட்டை விட்டு வெளியேறுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

இலங்கையில் வேதியியல் பட்டமும், பிரித்தானியாவின் டண்டீ பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டமும் வருணி பெற்றுள்ளார். முறையாக அனைத்து விசா கட்டணங்களையும் செலுத்தி, அங்கு வரி செலுத்தி வாழும் தங்களுக்கு இந்த உத்தரவு மிகப்பெரிய அதிர்ச்சியை அளித்துள்ளதாக அவர் வேதனை தெரிவித்துள்ளார்.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

covid 19
மீண்டும் பரவும் கொவிட்-19 பாதிப்பு: நான்கு பேர் உயிரிழப்பு
Ragitha Rajapaksa
விஜயதாசவின் புதல்வர் ரகித ராஜபக்ஷ உள்ளிட்ட மூவரினதும் விளக்கமறியல் நீடிப்பு!
jaffna kings
விளையாட்டு ஊழல் குற்றச்சாட்டு: Jaffna கிங்ஸ் அணியின் உரிமையாளர் ஒருவர் கைது!
ramanathan archchuna
அருச்சுனா கூட்டத்தில் வெளியேற்றப்பட்டமை தவறு - ரஜீவன் எம்.பி தெரிவிப்பு!
archchcuna
கிளிநொச்சி கூட்டத்தில் நாகரீகமற்ற முறையில் நடந்துகொண்டது யார்?
Former IGP C.D
ராஜபக்சாக்களின் நிழலாக இருந்த முன்னாள் IGP சி.டி. விக்ரமரத்ன தற்கொ*லை!