🔴 PHOTO 5000 மீற்றரில் வக்சன், 800 மீற்றர் ஓட்டங்களில் ருசிரு, நிமாலி தங்கம் வென்றனர்

தாய்லாந்தின் பெத்தும் தானி விளையாட்டரங்கில் நடைபெற்ற தாய்லாந்து பகிரங்க சுவட்டு மைதான சம்பயின்ஷிப்பின் மூன்றாம் நாளான இன்று விக்னராஜ் வச்கன், ருசிரு சத்துரங்க, நிமாலி லியனஆராச்சி ஆகியோர் தங்கப் பதக்கங்களை சுவீகரித்தனர்.

அதேவேளை, அயோமல் அக்கலன்க வெள்ளிப் பதக்கத்தையும் சவ்ரின் அஹ்மத் வெண்கலப் பதக்கத்தையும் வென்றனர்.

இலங்கைக்கான போட்டிகள் யாவும் நிறைவடைந்த நிலையில் இலங்கை 6 தங்கம், 4 வெள்ளி, ஒரு வெண்கலம் உட்பட மொத்தம் 11 பதக்கங்ளை வென்றெடுத்தது.

இன்று காலை நடைபெற்ற ஆண்களுக்கான 5000 மீற்றர் ஓட்டப் போட்டியை 15 நிமிடங்கள், 04.56 செக்கன்களில் நிறைவுசெய்த தலவாக்கொல்லையைச் சேர்ந்த மலையக மைந்தன் விக்னேஸ்வரன் வக்சன் தங்கப் பதக்கத்தை சுவீகரித்து அசத்தினார்.

பாகிஸ்தானில் அண்மையில் நடைபெற்ற தெற்காசிய நகர்வல ஓட்டப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற வக்சன், தாய்லாந்தில் ஆண்களுக்கான 1500 மீற்றர் ஓட்டப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றிருந்தார்.

இதன் மூலம் தாய்லாந்து பகிரங்க சுவட்டு மைதான சம்பயின்ஷிப்பில் வக்சன் பங்குபற்றிய இரண்டு நிகழ்ச்சிகளிலும் பதக்கங்களை வென்று இலங்கைக்கும் மலையகத்துக்கும் பெருமை சேர்த்துக்கொடுத்துள்ளார்.

ஆண்களுக்கான 800 மீற்றர் ஓட்டப் போட்டியை 1 நிமிடம் 50.01 செக்கன்களில் நிறைவுசெய்த ருசிரு சத்துரங்க தனது 2ஆவது தங்கப் பதக்கத்தை வென்றெடுத்தார். இவர் முதலாம் நாளன்று 1500 மீற்றர் ஓட்டப் போட்டியிலும் தங்கப் பதக்கத்தை சுவீகரித்திருந்தார்.

பெண்களுக்கான 800 மீற்றர் ஓட்டப் போட்டியை 2 நிமிடங்கள் 10.46 செக்கன்களில் நிறைவுசெய்த நிமாலி லியனஆராச்சி தங்கப் பதக்கத்தை சுவீகரித்தார். இவர் 1500 மீற்றர் ஓட்டப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றிருந்தார்.

ஆண்களுக்கான 400 மீற்றர் சட்டவேலி ஓட்டப் போட்டியை 50.75 செக்கன்களில் நிறைவுசெய்த அயோமல் அக்கலன்க வெள்ளிப் பதக்கத்தை வென்றெடுத்தார்.

தியகம மஹிந்த ராஜபக்ஷ சர்வதேச விளையாட்டரங்கில் ஒரு வாரத்திற்கு முன்னர் ஆண்களுக்கான 400 மீற்றர் சட்டவேலி ஓட்டப் போட்டியில் (50.20 செக்.) கனிஷ்ட தேசிய சாதனையை நிலைநாட்டிய அயோமல் அக்கலன்க, இன்றைய போட்டியில் அதனை விட கூடுதல் நேரத்தை எடுத்துக்கொண்டதால் தங்கப் பதக்கத்தை தவறவிட்டார்.

ஆண்களுக்கான முப்பாய்ச்சல் போட்டியில் பங்குபற்றிய சவ்ரின் அஹமத் 15.94 மீற்றர் தூரம் பாய்ந்து வெண்கலப் பதக்கத்துடன் திருப்தி அடைந்தார்.

இது இவ்வாறிருக்க, பெண்களுக்கான நீளம் பாய்தல் (6.37 மீற்றர்) போட்டியிலும் முப்பாய்ச்சல் (13.58 மீற்றர்) போட்டியிலும் நெத்மிகா மதுஷானி ஹேரத் இரண்டு தங்கப் பதக்கங்களை வென்றிருந்தார்.

பெண்களுக்கான 100 மீற்றர் சட்டவேலி ஓட்டப் போட்டியில் (14.27 செக்.) வத்சலா ஹப்புஆராச்சி வெள்ளிப் பதக்கத்தை வென்றெடுத்தார்.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

semmani
செம்மணியில் புதைக்கப்பட்ட தமிழர்களுக்கு நீதிகோரி மதுரையில் வெடித்த போராட்டம்!
hief
நவாலியில் களவாடப்பட்ட ஐம்பொன் விக்கிரகம்!
77e98751-ec05-4949-8ca7-d07aa8aec61b
முள்ளிவாய்க்காலில் தேர் திருவிழாவுக்கு சென்ற பெண்ணுக்கு நேர்ந்த கதி!
New Project t (3)
குப்பை தொட்டியில் இருந்து மீட்கப்பட்ட வர்த்தகரின் உடல்: நடந்தது என்ன?
IMG_5048
பாடசாலை சுற்றுலாவுக்கு அழைத்துச் செல்லவில்லை: போராட்டத்தில் குதித்த பாடசாலை மாணவன்!
news
மனைவி மற்றும் மாமியாரை கத்தியால் குத்திவிட்டு கிணற்றில் குதித்த கணவன்!