🔴 PHOTO நீதி வேண்டி செம்மணியில் ஏற்றப்படும் “அணையா தீபம்” : தொடர் போராட்டத்துக்கு அழைப்பு!

செம்மணியில் எலும்புக் கூடுகளாக மீட்கப்படும் உறவுகளுக்கு நீதி வேண்டி அணையா தீபம் ஏற்றப்படவுள்ளதாக மக்கள் செயல் அமைப்பு தெரிவித்துள்ளது.

யாழ். ஊடக அமையத்தில் இன்று (21) ஊடக சந்திப்பை முன்னெடுத்த குறித்த குழுவின் ஏற்பாட்டுக்குழுவின் பிரதிநிதிகள் இது குறித்து மேலும் கூறுகையில்,

தமிழ் மக்கள் பலரது உடலங்களை தாங்கிய மனிதப் புதைகுழிகள் தமிழர் தாயகமெங்கும் அதிகரித்து செல்கின்றதே தவிர தீர்வுகள் எதுவும் கிடையாத போசுபொருளாகவே அது நீடித்துச்செல்கின்றது .

அவ்வாறான நிலை இனியும் தொடரக் கூடாது, தமிழ் மக்கள் இழந்தவற்றையும் அதற்கான தீர்வுகளை பெற்றுக் கொள்ளும் பொறிமுறையை நோக்கிய வகையில் மக்கள் மயப்படுத்தப்பட்ட வகையில் ‘அணையா தீபம்’ போராட்டம் ஒன்று யாழ் செம்மணியில் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் மக்கள் செயல் அமைப்பு தெரிவித்துள்ளது.

குறிப்பாக செம்மணி மண்ணில் புதையுண்டுபோன உறவுகளுக்கு, நீதி வேண்டிய போராட்டமாக’ அணையா தீபம்” என்ற பெயரில் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

குறித்த போராட்டமானது அணையா தீபம் ஏற்றி 23,24,25 ஆகிய 3 நாள்களுக்கு அகிம்சை வழியில் உணவு தவிர்ப்பு போராட்டமாக முன்னெடுக்கப்படவுள்ளது.

குறிப்பாக காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின், இழந்த உறவுகளுக்கான நீதியை தேடி சர்வதேசத்தின் கவனத்தை ஈர்க்கும் வகையில் இப்போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.

நாளை மறுதினம் திங்கட்கிழமை 10 மணிக்கு ஆரம்பமாகும் இப்போராட்டம் இரவு பகலாக மூன்று தினங்கள் முன்னெடுக்கப்படவுள்ளது.

யாழ் வருகைதரவுள்ள ஐ.நா உயர் அதிகாரியின் பார்வைக்கு பிரச்சினையின் ஆழத்தை
வலியுறுத்தி முன்னெடுக்கப்படும் இந்த போராட்டத்திற்கு தமிழ் மக்கள், பொது அமைப்புகள், சமூக ஆர்வலர்கள் கலந்துகொண்டு போராட்டத்திற்கு வலுச்சேர்க்க வேண்டும் எனவும் அழைப்பு விடுத்திருந்தனர்.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

school
பாடசாலையில் மாணவனின் அடாவடியால் ஆசிரியர் வைத்தியசாலையில் அனுமதி!
New Project t (5)
110 வயதான இலங்கையின் மிக வயதான நபர்!
New Project t (3)
பாடசாலை கட்டடம் இடிந்து வீழ்ந்ததில் பலர் படுகாயம் - மீட்புப் பணிகள் தீவிரம்
New Project t (2)
நாளை முதல் அமுலுக்கு வரும் முக்கிய நடைமுறை!
New Project t (27)
கிளிநொச்சியில் குண்டு வெடிப்பு: இருவர் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதி!
New Project t (26)
பாடசாலை மாணவர்கள் தொடர்பில் வெளியான அதிர்ச்சித் தகவல்!