புத்தளம் – கொழும்பு பிரதான வீதியின் முந்தலம, நவதன்குலம பகுதியில் இன்று இடம்பெற்ற கோர விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் 10 பேர் காயமடைந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

அதிவேகமாக வந்த உந்துருளியும் வேன் ஒன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன.
இந்த விபத்தில் இரண்டு பெண்கள் மற்றும் ஒரு ஆண் என மொத்தம் மூவர் உயிரிழந்துள்ளனர்.

விபத்தில் காயமடைந்த 10 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
