ரணிலின் பயணங்கள்: ரூ.1270 மில்லியன் குறித்து CID விசாரணை!

ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக பதவி வகித்த காலத்தில் மேற்கொண்ட வெளிநாட்டுப் பயணங்கள் தொடர்பில் விரிவான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக, குற்றப் புலனாய்வுத் திணைக்களம் அறிவித்துள்ளது.

கோட்டை நீதவான் நிலுபுலி லங்காபுரவிடம் இந்த விடயங்களை குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் அறிக்கையிட்டுள்ளனர்.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக இருந்த காலத்தில் மேற்கொண்ட தனிப்பட்ட வெளிநாட்டுப் பயணங்கள் மற்றும் அப்பயணங்கள் தொடர்பான நடவடிக்கைகள் தொடர்பில் பொதுச்சொத்து சட்டத்தின் கீழ் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த விசாரணை தொடர்பில் தற்போது வெளிநாட்டிலுள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கீழ் கடமையாற்றிய, இரண்டு சிரேஷ்ட அதிகாரிகளிடம் குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் வாக்குமூலங்களை பதிவு செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் 23 வெளிநாட்டு பயணங்களுக்காக செலவிடப்பட்ட ரூ.1270 மில்லியன் குறித்து சி.ஐ.டி விசாரணைகள்

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தனிப்பட்ட வெளிநாட்டு பயணங்கள் குறித்து தற்போது விசாரணை நடைபெற்று வருவதாக குற்றப் புலனாய்வுத் துறை (சி.ஐ.டி) கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

ஆளும் கட்சியின் தலைமை அமைப்பாளரான அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸ மே மாதம் வெளியிட்ட தகவல்களின்படி, முன்னாள் ஜனாதிபதி 2022 முதல் 2024 வரை 23 வெளிநாட்டு பயணங்களை மேற்கொண்டார், இதற்காக ரூ.1270 மில்லியன் செலவிடப்பட்டுள்ளது.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

New Project t (2)
தென்னிலங்கையை உலுக்கிய துப்பாக்கிச் சூட்டில் அதிகரிக்கும் பலி எண்ணிக்கை!
New Project t (1)
ஜனாதிபதியை குறிவைத்து பரப்பப்படும் தகவல்கள்: சி.ஐ.டியில் முறைப்பாடு!
New Project t
நல்லூருக்கு செல்வோருக்கு பொலிஸார் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!
varalakshmi-poojai
வரலட்சுமி நோன்பு: செல்வ வளம் தரும் 3 புனிதப் பொருட்களின் தெரியுமா?
vavuniya-thump
அகில இலங்கை முய் தாய் போட்டிகளில் தேசிய மட்டத்தில் வவுனியா விபுலானந்தா கல்லூரி மாணவிகள் சாதனை: அபுதாபியில் நடைபெறும் போட்டிக்கும் தெரிவு
New Project t (3)
இலங்கையிலுள்ள சீனர்களுக்கு சீனத் தூதரகம் விடுத்துள்ள முக்கிய அறிவுறுத்தல்!