🔴 VIDEO துப்பாக்கியை காட்டி மிரட்டிய அதிகாரியால் குழப்பநிலை!

வவுனியா, ஓமந்தை, கொந்தக்காரன்குளம் பகுதியில் காணி ஒன்றில் அபிவிருத்தி பணிகளை செய்து கொண்டிருந்தவர்களை வனவளத்திணைக்கள அதிகாரிகள் கைது செய்தமையால் குழப்பநிலை ஏற்ப்பட்டுள்ளது.

குறித்த பகுதியில் உள்ள காணி ஒன்றில் அபிவிருத்தி பணிகளை அந்த காணியை பராமரிப்பவர்களால் நேற்று(13) மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்போது, அந்த பகுதிக்கு சென்ற வனவளத்திணைக்கள அதிகாரிகள் இது வனவளத்திணைக்களத்திற்கு சொந்தமான காணி என தெரிவித்து அந்த பணிகளை தடுத்து நிறுத்தியதுடன் அதில் ஈடுபட்ட ஒருவரை தமது வாகனத்தில் ஏற்றிச்சென்றனர்.

இதன்போது, குறித்த காணியின் உரிமையாளர் என தெரிவிக்கப்படும் நபர் இவ் நடவடிக்கைக்கு எதிர்ப்பு வெளியிட்டுள்ளார். அத்துடன் கைது செய்யப்பட்டவரை விடுவிக்குமாறும் கூறியிருந்தார். இதனால் அந்தப்பகுதியில் குழப்பநிலை ஏற்ப்பட்டது.

இதன்போது வனவளத்திணைக்கள அதிகாரி தனது கைத்துப்பாக்கியை காட்டி மிரட்டியதாக பொதுமக்களால் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, குறித்த சம்பவத்தில் தமது கடமைக்கு இடையூறு விளைவித்ததுடன், குற்றவாளியை தப்பிக்க ஒத்துழைப்பு வழங்கியதாக தெரிவித்து வனவளத்திணைக்கள அதிகாரிகளால் ஓமந்தை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

வவுனியா ஓமந்தை உட்பட பல்வேறு பகுதிகளில் மக்களின் பூர்விக காணிகளில் வனவளத்தினைக்களம் எல்லைகற்களை போட்டுள்ளதால் தமது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக பொதுமக்கள் தொடர்ச்சியாக குற்றம்சாட்டி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

New Project t (2)
தென்னிலங்கையை உலுக்கிய துப்பாக்கிச் சூட்டில் அதிகரிக்கும் பலி எண்ணிக்கை!
New Project t (1)
ஜனாதிபதியை குறிவைத்து பரப்பப்படும் தகவல்கள்: சி.ஐ.டியில் முறைப்பாடு!
New Project t
நல்லூருக்கு செல்வோருக்கு பொலிஸார் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!
varalakshmi-poojai
வரலட்சுமி நோன்பு: செல்வ வளம் தரும் 3 புனிதப் பொருட்களின் தெரியுமா?
vavuniya-thump
அகில இலங்கை முய் தாய் போட்டிகளில் தேசிய மட்டத்தில் வவுனியா விபுலானந்தா கல்லூரி மாணவிகள் சாதனை: அபுதாபியில் நடைபெறும் போட்டிக்கும் தெரிவு
New Project t (3)
இலங்கையிலுள்ள சீனர்களுக்கு சீனத் தூதரகம் விடுத்துள்ள முக்கிய அறிவுறுத்தல்!