🔴 VIDEO யாழில் கிராம சேவகரின் முறைகேடுகளை அம்பலப்படுத்தியவருக்கு கொலை மிரட்டல்!

கடந்த சில நாட்களுக்கு முன் ஏற்பட்ட அனர்த்தத்தின் போது இலங்கையின் பல்வேறு பகுதிகள் முற்றாகவாம், பகுதியளவிலும் பாதிக்கப்பட்டன.

அதன் அடிப்படையில் வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் அதிகம் பாதிக்கப்பட்ட இடங்களில் முதன்மையாக நாகர் கோவில் பகுதி காணப்படுகிறது.

அக் கிராமத்தில் பணி புரியும் கிராம உத்தியோகத்தர் பக்க சார்பாக செயற்படுவதாகவும், பாதிக்கப்பட்ட சில வீடுகளை இது வரைக்கும் கிராம உத்தியோகத்தர் வந்து பார்வையிடவில்லை எனவும் நாகர் கோவில் மக்கள் அண்மையில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு கருத்து தெரிவித்த நபருக்கு தொலைபேசி அழைப்பு மூலம், ‘ஊடகங்களுக்கு கொடுத்த கருத்தினை மறுபடியும் வாபஸ் வாங்குமாறும் இல்லை என்றால் ஆள் வைத்து கொலை செய்ததாகவும் கொலைமிரட்டல் விடப்பட்டுள்ளதாக என பாதிக்கப்பட்ட நபர் கூறியுள்ளார்.

இச் சம்பவம் தொடர்பாக மருதங்கேணி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்ட நிலையில் மேலதிக விசாரணைகளை மருதங்கேணி பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

mano
"மலையகத் தமிழர்களுக்கு காணி இல்லையேல் வட, கிழக்கில் குடியேற்றம்" - மனோ கணேசன்
weather update
விடுக்கப்பட்டுள்ள சிவப்பு எச்சரிக்கை: 4 மாவட்டங்களில் மக்கள் வெளியேற்றம்
flood
நிவாரணப் பணிகளின் போது அரசியல் அழுத்தம்: எழுந்துள்ள குற்றச்சாட்டு!
japan
ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்:விடுக்கப்பட்டுள்ள சுனாமி எச்சரிக்கை
Ambitiya Thero
அம்பிட்டிய தேரர் தொடர்பில் நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு!
crime
கணவனை தாக்கி கொலை செய்த மனைவி!