ஆம்ஸ்டர்டாம் ஷிபோல் (Amsterdam Schiphol) விமான நிலையத்தில் காணப்படும் புதுமையான மின்னணு கடிகாரம் பற்றிய விஷயம் தான்.
இந்த வியப்பூட்டும் டிஜிட்டல் கடிகாரம் ஒருவர் சிக்கியிருப்பது போன்று தோற்றமளிக்கச் செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது, இது பார்ப்பவர்களை விழித்துப் பார்க்கச் செய்கிறது.

ஐரோப்பாவின் மிகப்பெரிய விமான நிலையங்களில் ஒன்றான ஷிபோல் Schiphol விமான நிலையம், பயணிகளுக்கு பல்வேறு வசதிகளை வழங்கி வருகின்றது. அதில் ஒன்று — அங்குள்ள கடிகாரங்கள், குறிப்பாக ஹில்டன் ஹோட்டலுக்கு அருகிலுள்ள இடத்தில், நேரம் மற்றும் தூரங்களை காட்டும் சிறப்பம்சங்களுடன் பொருத்தப்பட்டுள்ளன.

இந்த மின்னணு கடிகாரம் ஒரு மனிதன் உள்ளே இருப்பது போல தோன்றும். ஒவ்வொரு நிமிடமும், அந்த மனிதன் போல காட்சியளிக்கும் அவதாரம்.ஒவ்வொரு நிமிடமும் அவர் கடிகார முட்களை அழித்து மீண்டும் வரைவது போல தோன்றும். அவர் ஒரு நாளில் பல முறை நேரம் மாற்றுவது போல தோன்றும். ஆனால் உண்மையில், இது ஒரு கலைஞரால் உருவாக்கப்பட்ட தயாரித்த காணொளி தான்.