மலசலகூட குழியில் இருந்து எட்டு வயது சிறுவன் சடலமாக மீட்பு!

பொகவந்தலாவ கிவ் கீழ்பிரிவு தோட்டத்தில் மலசலகூட குழியில் இருந்து எட்டு வயது சிறுவன் ஒருவன் சடலமாக மீட்கப்பட்டதாக பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் நேற்று (3) மாலை 05.30 மணியளவில் இடம் பெற்றதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது, சிறுவனின் தந்தை வீடமைப்பு பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த வேளை சிறுவன் கை கழுவுவதற்காக வீட்டின் பின்புறத்திற்கு சென்ற போது, அங்கு நீர் நிரம்பி காணப்பட்ட குழியில் தவறிவிழுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தனது மகனை காணவில்லையென சிறுவனின் தந்தை இரண்டு முறைக்கு மேல் கூக்குரல் ஏழுப்பியும் மகன் வாரததை தொடர்ந்து, தந்தை வீட்டின் பின்புறமாக சென்று பார்த்த போது சிறுவனின் பாதணிகள் இரண்டும் மிதந்து கொண்டு இருந்ததாகவும் அதன் பிறகு சிறுவனை மீட்டெடுத்து டிக்கோயா கிழங்கன் ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போதிலும் சிறுவன் மரணித்திருந்ததாக வைத்தியசாலையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

இதேவேளை, கிவ் தமிழ் வித்தியாலயத்தில் தரம் மூன்றில் கல்வி கற்று வந்த லியோ பெற்ரீக் எலன் சசன் என்ற சிறுவனே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொள்ள தடயவியல் பொலிஸார் வரவழைக்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக சடலம் டிக்கோயா கிழங்கன் ஆதார வைத்தியசாலையின் பிரதே அறையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் இந்த தொடர்பாக மேலதிக விசாரணைகளை பொகவந்தலாவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

price
உச்சம் தொட்ட பச்சை மிளகாயின் விலை!
death
காதலன் முன்னிலையில் 17 வயது காதலி செய்த அதிர்ச்சி செயல்!
vehicle
வாகனங்களின் விலைகளில் ஏற்படவுள்ள மாற்றம்: வெளியான தகவல்!
colombo
தலைநகருக்கு வருபவர்களை கடத்தும் மர்ம கும்பல்: வெளியான அதிர்ச்சித் தகவல்
douglas devananda
முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கைது!
gold price
தங்க விலையில் ஏற்பட்ட திடீர் மாற்றம்!