முன்னாள் தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்காரர் (Manusha Nanayakkara) இன்று (15) இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு (CIABOC) முன்னிலையில் வாக்குமூலம் அளிக்க முன்வந்தார்.

கடந்த ஆட்சி காலத்தில் இஸ்ரேலுக்கு வேலை வாய்ப்புகளை வழங்கும் முறையில் ஏற்படுத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணையில் இவர் இன்று ஆணைக்குழுவுக்கு முன்னிலை இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை முன்னாள் பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் (Tiran Alles) மீது இலஞ்சம் அல்லது ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.