தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் நாட்டை முன்னோக்கிக் கொண்டு செல்ல முயற்சி செய்தாலும், அவர்கள் தோல்வியையே சந்தித்து வருவதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இலங்கையில் ஏற்பட்ட ‘டிட்வா’ சூறாவளியால் பாதிக்கப்பட்டவர்களுக்காக, கொழும்பிலுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) தலைமையகத்தில் நடைபெற்ற மத வழிபாட்டு நிகழ்வில் கலந்து கொண்ட பின்னர் ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
அரசாங்கம் எல்லா விடயங்களிலும் தலையிட முயற்சிப்பதன் மூலம் காரியங்களைக் குழப்பிக் கொள்கிறது என்று அவர் குற்றம் சாட்டினார்.
“இந்த அரசாங்கத்திடம் சில நேர்மறையான விடயங்களை நாங்கள் காண்கிறோம், ஆனால் பெரும்பாலானவை எதிர்மறையாக இருப்பதே பிரச்சினையாக உள்ளது,” என அவர் மேலும் குறிப்பிட்டார்.
