கிளிநொச்சியில் மசாலாப் பொருட்கள், மருந்துகள், அழகுசாதனப் பொருட்களுடன் நால்வர் கைது.

கிளிநொச்சியில் கடற்படை நடத்திய விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமாக கொண்டு வரப்பட்ட மசாலாப் பொருட்கள், மருந்துகள், அழகுசாதனப் பொருட்களுடன் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட 300 கிலோகிராம் ஏலக்காய், 260 கிலோகிராம் மஞ்சள் தூள், 273 கிலோகிராம் உலர்ந்த இஞ்சி, அழகுசாதனப் பொருட்கள் மற்றும் மருந்துகள் உள்ளிட்ட மசாலாப் பொருட்களுடன் இரண்டு (02) வாடகை வண்டிக கடற்படையினரால் கைப்பற்றியுள்ளன.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 39 முதல் 49 வயதுக்குட்பட்ட எரக்கண்டி, கல்முனைகுடி, திருகோணமலை மற்றும் புத்தளம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட நான்கு (04) சந்தேக நபர்கள், மசாலாப் பொருட்கள், அழகுசாதனப் பொருட்கள், மருந்துகள் மற்றும் இரண்டு (02) வாடகை வண்டிகளுடன் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக காங்கேசன்துறை சுங்கத் தடுப்பு அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

former presidents
முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பு வாகனங்கள் : அமைச்சர் விடுத்துள்ள அறிவிப்பு
gold price
வரலாற்றில் முதல் முறையாக அதி உச்சத்தை எட்டிய தங்க விலை!
court
பிரதம நீதியரசர் மீது பாதணியை வீசிய சட்டத்தரணி: பரபரப்பு சம்பவம்
NPP
தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திற்கு எதிராக வெடிக்கவுள்ள போராட்டம்!
crime
தென்னிலங்கையில் வீடொன்றுக்குள் நடந்த பயங்கரம்!
lady lawyer
பெண் சட்டத்தரணி செய்த முறையற்ற செயலால் அதிரடியாக கைது! யாழில் சம்பவம்