உலக சந்தையில் தங்கத்தின் விலை வரலாற்றில் முதல் முறையாக 5,000 அமெரிக்க டொலர் எல்லையை கடந்துள்ள நிலையில் இலங்கையிலும் இன்றைய தினம் தங்கத்தின் விலை அதிகரித்துள்ளது.

இதற்கமைய நாட்டில் இன்றைய தினம் (26) தங்கத்தின் விலை 12, 000 ஆல் அதிகரித்துள்ளது.
செட்டியார் தெரு தங்க சந்தையின் தகவல்களுக்கு அமைய கடந்த வௌ்ளிக்கிழமை (23) ரூ. 385,000 ஆக காணப்பட்ட 24 கரட் ஒரு பவுண் தங்கத்தின் விலை இன்றைய தினம் ரூ. 397,000 ஆக அதிகரித்துள்ளது.
அதேநேரம் கடந்த வாரம் ரூ. 356,000 ஆக நிலவிய 22 கரட் ஒரு பவுண் தங்கத்தின் விலை இன்றைய தினம் ரூ. 362,200 ஆக அதிகரித்துள்ளது.
