அவசரமாக தமிழர் பகுதியில் போடப்பட்ட அறிவித்தல் பலகை: அடுத்த ஆக்கிரமிப்பா?

மட்டக்களப்பு மாவட்டம் படுவான்கரைப் பெருநிலம் மண்முனை தென்மேற்கு பிரதேச பிரிவில் உள்ள தாந்தாமலை முருகன் ஆலயத்தில் செல்லும் வீதிகளில் இரு இடங்களில் அறிவித்தல் பலகை இடப்பட்டுள்ளது.

குறித்த அறிவித்தல் பலகைகள், நேற்றையதினம் (20.11.2025) இடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதில் தாந்தாமலை தொல்லியல் இடம் என மூன்று மொழிகளாலும் எழுதப்பட்ட அறிவித்தல் பலகை தாந்தாமலை செல்லும் நாற்பது வட்டை சந்தியில் முருகன் ஆலயத்தை அம்புக்குறி காட்டி இடப்பட்டுள்ளது.

மற்றைய அறிவித்தல் பலகை தாந்தாமலை முருகன் ஆலத்துக்கு அண்மையில் உள்ள பொலிஸ் சாவடி நிலைய சந்தியில் தாந்தாமலை முருகன் ஆலயத்தை அம்புக்குறியிட்டு காட்டப்பட்டுள்ளது.

திருகோணமலையில் அத்துமீறி கடந்ந நவம்பர் 16 அன்று புத்தர் சிலை வைக்கப்பட்டு சரியாக மூன்று தினங்களில் மட்டக்களப்பு மாவட்டத்தில் படுவான்கரைப் பெருநிலத்தில் இந்த விளம்பரப்பலகையிடப்பட்டுள்ளமை பௌத்த விகாரைகளை நிறுவும் திட்டமாக இருக்குமா என்ற சந்தேகம் எழுகின்றது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்துள்ளார்.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

vehicles
2025 ஆம் ஆண்டில் வாகன இறக்குமதி வரிகளால் மேலதிக வருமானம்!
india
யாழை வந்தடைந்தார் இந்திய நாடாளுமன்ற உறுப்பினர் திருமாவளவன்!
passports
வீதியோரத்தில் இருந்து மீட்க்கப்பட்ட கடவுச்சீட்டுகள்!
jaffna university
யாழ். பல்கலைக்கழகத்தின் நிர்வாகச் செயல்களில் தலையிட்டதில்லை - ரஜீவன் எம்.பி
maldives
மாலைத்தீவில் கைதான இலங்கையர்கள்: நாட்டுக்கு அழைத்து வருவதில் சிக்கல்
jaffna sea
யாழ். தாளையடி கடற்பகுதிக்கு செல்வோருக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!