இந்திய சினிமா நட்சத்திரமான ஹிருத்திக் ரோஷன்( hrithik roshan) இலங்கையில் இடம்பெறும் நிழ்வொன்றுக்கு வருகை தரவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் ஓகஸ்ட் 2 ஆம் திகதி சிட்டி ஒப் ட்ரீம்ஸ் நட்சத்திர விடுதியின் திறப்பு விழாவில் கலந்து கொள்வதற்காக அவர் இலங்கை வரவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
முன்னதாக இந்நிகழ்வுக்கு பொலிவுட் நட்சத்திரமான ஷாருக்கான் வருகை தரவிருந்த நிலையில், படப்பிடிப்பின் போது ஏற்பட்ட காயத்துக்கு அமெரிக்காவில் சிகிச்சை பெறுவதால் அவரது வருகை ரத்துச் செய்யப்பட்டிருந்தது.
இதனால் அவருக்குப் பதிலாக மற்றுமொரு பொலிவுட் நட்சத்திரமான ஹிருத்திக் ரோஷன் வருகை தருகின்றமை குறிப்பிடத்தக்கது.