மீண்டும் அதே கோரம் மனைவியை கொன்று தலையுடன் போலீசில் சரணடைந்த கணவர்!

கர்நாடக மாநிலம் பெங்களூரு அருகே உள்ள அனேகல் பகுதியைச் சேர்ந்த சங்கர் (வயது 28) என்பவர் தனது மனைவியை கொடூரமாக கொலை செய்து, அவரது தலையை காவல்நிலையத்திற்கு எடுத்துச் சென்று சரணடைந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சங்கர், தனது 26 வயதான மனைவியுடன் ஹீலலிகே என்ற கிராமத்தில் வீடு வாடைக்கு எடுத்து வசித்து வந்தார். தம்பதிக்கு ஒரு குழந்தையும் உள்ளது. கடந்த ஜூன் 3ஆம் தேதி, “நான் வேலைக்குச் செல்கிறேன்; நாளை காலைதான் வருவேன்” என்று கூறி வேலைக்குச் சென்ற சங்கர், வேலை விரைவில் முடிந்ததால் அன்று இரவே வீடு திரும்பினார்.

வீட்டிற்கு வந்த போது, சங்கருக்கு எதிர்பாராத அதிர்ச்சி காத்திருந்தது. அவர் வீட்டில் வந்தபோது, தனது மனைவி மற்றொரு ஆணுடன் இருப்பதைக் கண்டு கடும் கோபத்திற்கு ஆளாகி, மனைவியுடன் சண்டையில் ஈடுபட்டார். தொடர்ந்து தகராறுகள் நடைபெற்று வந்த நிலையில், மனைவி சில நாட்களுக்கு முன்பு வீடு விட்டு வெளியேறியதுடன், அடிக்கடி வந்து சங்கருடன் வாக்குவாதம் செய்து வந்தார்.

இதுவே நேற்று மீண்டும் நடந்ததாக கூறப்படுகிறது. தொடர்ந்து மோதலால் கடும் கோபமடைந்த சங்கர், மனைவியை தாக்கியதுடன், பின்னர் கூரிய ஆயுதத்தை கொண்டு கழுத்தை அறுத்து கொலை செய்தார். சம்பவத்திற்குப் பிறகு, தனது மனைவியின் தலையை பைக்கில் வைத்து அருகிலுள்ள காவல்நிலையத்திற்கு எடுத்துச் சென்று சரணடைந்தார்.

இந்த கொடூர சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து சங்கரைக் கைது செய்துள்ளனர். விசாரணை தீவிரமாக நடைபெற்று வருகிறது.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

ndb bank
இலங்கையில் தனியார் வங்கியொன்றின் உள்ளக மோசடி: வெளியான அதிர்ச்சி தகவல்
Suresh Saleh
சுரேஷ் சலே மேன்முறையீட்டு நீதிமன்றில் மனுத் தாக்கல்!
iran war
போரை நிறுத்துவதற்கான அமைதி ஒப்பந்தம் தொடர்பில் வெளியான தகவல்!
food price
இன்று நள்ளிரவு முதல் கொத்து, ப்ரைட் ரைஸ், சோற்றுப் பொதி விலைகள் அதிகரிப்பு!
vavuniya
புதைக்கப்பட்ட சடலத்தின் தலை மர்ம நபர்களால் அகற்றம்: வவுனியாவில் சம்பவம்
america
போரில் காயமடைந்த அமெரிக்கப் படையினரின் எண்ணிக்கை அதிகரிப்பு!