2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில், 2026 ஆம் ஆண்டுக்கான தரம் 6 பாடசாலை சேர்க்கைக்கான மேன்முறையீட்டு விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான அறிவிப்பை கல்வி அமைச்சு வெளியிட்டுள்ளது.

அதன்படி, இன்று (12) முதல் ஜனவரி 25 ஆம் திகதி வரை விண்ணப்பங்கள் நிகழ்நிலையில்(Online) ஏற்றுக்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் கல்வி அமைச்சின் www.moe.gov.lk என்ற உத்தியோகபூர்வ வலைத்தளத்தை அணுகுவதன் மூலம் அதிகபட்சமாக மூன்று பாடசாலைகளுக்கான மேன்முறையீட்டு விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம்.
இதேவேளை, g6application.moe.gov.lk என்ற பிரத்யேக இணைப்பு மூலமாகவும் மேன்முறையீட்டு விண்ணப்பங்களை நேரடியாக சமர்ப்பிக்கலாம் என்று அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.
