உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் பால்மாவின் விலையை அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படவில்லை என மில்கோ நிறுவனத்தின் தலைவர் ஹேமஜீவ கோட்டாபாய தெரிவித்துள்ளார்.
ஊடகமொன்றிற்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் எதிர்கால சந்தை நடவடிக்கைகளைக் கண்காணித்ததன் பின்னரே மேலதிக நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

உலக சந்தையில் பால்மாவின் விலை 8 வீதத்தினால் அதிகரித்துள்ளதனால் இறக்குமதி செய்யப்படும், 400 கிராம் பால்மா பொதி ஒன்றின் விலையை 100 ரூபாவினால் அதிகரிப்பதற்கு நேற்று (10) நடவடிக்கை எடுக்கப்பட்டது.
அதற்கமைய, இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோகிராம் பால்மாவின் விலை 250 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, இந்த மாதம் முதல் புதிய விலைத் திருத்தத்திற்கு அமைய சந்தைக்கு பால்மா விடுவிக்கப்படும்.
எனினும் உலக சந்தையில் பால்மாவின் விலை குறைவடையும் பட்சத்தில், உள்நாட்டு சந்தையிலும் பால்மாவின் விலை குறைக்கப்படும் என பால்மா இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.