கனடாவில் வீட்டுக்கு வெளியே சுட்டுக் கொல்லப்பட்ட இந்திய தொழிலதிபர்!

கனடாவில் தொழிலதிபரும், Canam இன்டர்நேஷனல் நிறுவனத்தின் தலைவருமான தர்ஷன் சிங் சாஹ்சி (68), பிரிட்டிஷ் கொலம்பியாவின் அபோட்ஸ்ஃபோர்டில் உள்ள அவரது வீட்டிற்கு வெளியே சுட்டுக் கொல்லப்பட்டார்.

வீட்டின் வெளியே அவர் தனது சிற்றூந்தில் அமர்ந்திருந்தபோது மர்ம நபர் அவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டுத் தப்பிச் சென்றதாகக் கூறப்படுகிறது.

காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்தபோது, சிற்றூந்தில் இருந்த சாஹ்சி காயங்களுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்தார்.

அவருக்கு முதலுதவி வழங்கப்பட்டும் எந்த பலனும் இல்லை. அவர் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டதாக அதிகாரிகள் உறுதிப்படுத்தினர்.

குறித்த சம்பவம் தொடர்பாக இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை என்றும், விசாரணை ஆரம்ப கட்டத்தில் இருப்பதாகவும் கனடா காவல்துறை தெரிவித்துள்ளது.

தர்ஷன் சிங் சாஹ்சி பஞ்சாபின் லூதியானா மாவட்டத்தில் உள்ள ராஜ்கர் கிராமத்தைச் சேர்ந்தவர்.

விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்த இவர் 1991 ஆம் ஆண்டு கனடாவுக்கு குடிபெயர்ந்து தொழிலதிபராக உயர்ந்தார்.

கனடாவில், இந்தியாவைச் சேர்ந்த தொழிலதிபர் தர்ஷன் சிங் சாஹ்சி சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

Sri Lanka Property Seizure Raid
சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவு அதிரடி: புத்தளத்தில் ரூ. 50 மில்லியனுக்கும் அதிகமான சொத்துக்கள் முடக்கம்!
Minuwangoda
முன்னாள் பிரதி அமைச்சரின் மனைவியை இலஞ்சம் கொடுக்கத் தூண்டிய விவகாரம்: நீதிமன்றப் பதிவாளர் விளக்கமறியலில்!
SivarasaAnojan
சிவராசா அனோஜனை விடுவிக்கக் கோரி ஜனாதிபதியிடம் மகாநாயக்க தேரர்கள் மகஜர் கையளிப்பு!
KeheliyaRambukwella
முன்னாள் அமைச்சர் கெஹலியவின் மகன் வீட்டில் கொள்ளை: பல இலட்சம் பணம், பொருட்கள் திருட்டு!
GotabayaRajapaksa
கோட்டாபய ராஜபக்சவின் ரிட் மனு தள்ளுபடி: மேல் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யத் திட்டம்!
Talaimannar
தலைமன்னாரில் இருந்து 8 மணல் திட்டுகளுக்குச் சுற்றுலாப் படகு சேவை: அக்டோபர் 15 முதல் ஆரம்பம்