🔴 PHOTO இந்திய பிரபல நடிகர் மோகன்லால் இலங்கை நாடாளுமன்றத்திற்கு வருகை!

மலையாள சினிமாவில் சூப்பர் ஸ்டாராக இருக்கும் மோகன்லால் நாடாளுமன்றத்தின் பொதுமக்கள் களரியிலிருந்து நாடாளுமன்ற அமர்வை பார்வையிட்டு வருகின்றார்.

‘பேட்ரியட்’ (Patriot) எனும் திரைப்படத்தின் மூன்று நாட்கள் படப்பிடிப்பில் கலந்துகொள்வதற்காக இலங்கைக்கு வருகை தந்திருந்த நிலையில், இன்று (19) இலங்கை நாடாளுமன்றத்திற்கு சென்றுள்ளார்.

சமீப காலமாக பல்வேறு தென்னிந்திய திரைப்படக் கலைஞர்கள் படப்பிடிப்பு மற்றும் சுற்றுலாப் பயணங்களுக்காக இலங்கைக்கு வருகை தருகின்றனர்.

பிரபல மலையாள நடிகர்களான மோகன்லால் மற்றும் குஞ்சாக்கோ போபன் ஆகியோர் படப்பிடிப்பிற்காக கடந்த 15ஆம் திகதி இலங்கை வந்தனர்.

இந்நிலையில், மோகன்லால் இலங்கை நாடாளுமன்றத்திற்கு வருகை தந்துள்ளார்.

இதன்போது பிரதி சபாநாயகர் றிஸ்வி சாலி அவரை வரவேற்றதுடன் நடிகர் மோகன்லால் பார்வையார் கலரியிலிருந்து நாடாளுமன்ற அமர்வை பார்வையிட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

kovil news
டிஜிட்டல் தீர்த்தம்: கோவில் கருவறையில் தானியங்கி தீர்த்தம் வழங்கும் இயந்திரம்!
trinco issue
திருகோணமலை விகாரை விவகாரம்: ரீட் மனுவை மீண்டும் அழைக்க உத்தரவு
namal
பிரித்தானியாவில் நாமலுக்கு முட்டுக்கட்டை போட்ட தமிழ் புலம்பெயர் அமைப்புகள்!
Akuregoda gun shoot
அக்குரேகொடை இரட்டை கொலை - அடையாளம் காணப்பட்டுள்ள துப்பாக்கிதாரி!
gas issue
சமையல் எரிவாயு தட்டுப்பாடு: கடும் சிரமத்தில் நுகர்வோர்
Andrew
பிரித்தானிய மன்னரின் சகோதரர் கைது!