இலங்கைக்கு பில்லியன் கணக்கில் வருமானம், வெளியானது தகவல்

வாகனங்களை இறக்குமதி செய்வதற்கான அனுமதி வழங்கப்பட்டதிலிருந்து இதுவரை 163 பில்லியன் ரூபாய் சுங்க வருவாய் ஈட்டப்பட்டுள்ளதாக இலங்கை சுங்கம் தெரிவித்துள்ளது.

கொழும்பில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் உரையாற்றிய சுங்கத்தின் மேலதிக பணிப்பாளர் நாயகம் சீவலி அருக்கொட,

‘‘இந்த ஆண்டு நிர்ணயிக்கப்பட்ட வருவாய் இலக்குகளை தாண்டி செல்லும் திறன் சுங்கத்திற்கு உள்ளது. 2025 ஆம் ஆண்டில் நாங்கள் பெற்ற வருவாய் இலக்கு ரூ. 2,115 பில்லியன். கடந்த ஆண்டு, எங்கள் வருவாய் இலக்கு ரூ. 1,533 பில்லியனாக இருந்தது.

கடந்த ஆண்டு, நாங்கள் அந்த இலக்கை தாண்டி ரூ. 1,535 பில்லியன் வருவாய் ஈட்டினோம். அதேநேரம் இந்த ஆண்டும், ஜூன் மாத நடுப்பகுதியில், நாங்கள் ரூ. 900 பில்லியன் வருவாயை ஈட்டியுள்ளோம்.

வாகனங்களைப் பொறுத்தவரை, 2025 பெப்ரவரி 1, முதல் இறக்குமதி செய்ய அரசாங்கம் அனுமதித்தது. இதுவரை, சுமார் 14,000 வாகனங்கள இறக்குமதி செய்யப்பட்டுள்ளன. இதன் ஊடாக சுமார் ரூ. 165 பில்லியன் வருமானம் ஈட்டியுள்ளோம். இந்த ஆண்டு, வாகன இறக்குமதியிலிருந்து ரூ. 450 பில்லியன் எதிர்பார்க்கிறோம்.” என்றார்.

facebook

Related Posts :

Special News :

Entertainment :

Special News

court
இரட்டை கொலை தொடர்பில் 6 பேருக்கு மரண தண்டனை விதிப்பு!
jaffna news
யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற குழு மோதலில் ஐவர் காயம்!
bus accident
தலாவ பேருந்து விபத்தில் ஒருவர் பலி - 39 பேர் காயம்!
school student death
உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றவிருந்த மாணவி திடீர் மரணம்!
srilankan death
வெளிநாடொன்றில் அடுக்குமாடிக் குடியிருப்பில் இருந்து விழுந்த இலங்கை இளைஞன்!
gun shoot
கொட்டாஞ்சேனையில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்சூட்டுக்கு இதுதான் காரணமா?