🔴 VIDEO 🔴 PHOTO அமெரிக்காவின் தாக்குதலின் பின்னர் ஈரான் இஸ்ரேல் மீது கடும் தாக்குதல்

ஈரானின் புதிய தாக்குதல்கள் காரணமாக இஸ்ரேலிய தலைநகரில் கட்டிடங்கள் பலத்தை சேதத்தை சந்தித்துள்ள என அவசரசேவையை சேர்ந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

இது பெரிய அளவிலான அழிவு பல இரண்டுமாடிக்கட்டிடங்கள் பலத்தசேதமடைந்துள்ளன ,சில தரைமட்டமாகியுள்ளன என இஸ்ரேலின் அவசரசேவை பிரிவு தெரிவித்துள்ளது.

தரைமட்டமாகியுள்ள கட்டிடமொன்றையும் பெரும் சேதத்தை சந்தித்துள்ள ஏனைய கட்டிடங்களையும் காண்பிக்கும் வீடியோவை இஸ்ரேலின் அவசரசேவை பிரிவினர் வெளியிட்டுள்ளனர்.

அந்த பகுதியில் பல அவசரசேவை பணியாளர்களை காணமுடிகின்றது.

வெடிபொருட்கள் மத்திய இஸ்ரேலில் விழுந்துள்ளதால் அப்பகுதிக்கு குண்டுஅகற்றும் பிரிவினர் அனுப்பப்பட்டுள்ளனர் என இஸ்ரேலிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை ஹைபா நகரும் தாக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஈரானின் தாக்குதலை தொடர்ந்து ஆகக்குறைந்தது பத்து இடங்களிற்காவது அவசரசேவை பிரிவினரை அனுப்பியுள்ளோம் 10 பேர் காயமடைந்துள்ளனர் என இஸ்ரேலின் அவசரசேவை பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

Photo Israel Police

இஸ்ரேலின் பென் குரியன் விமான நிலையத்தை குறிவைத்து ஈரான் தாக்குதல் நடத்தியது – அரசு ஊடகங்கள்

பென் குரியன் விமான நிலையம் உட்பட இஸ்ரேலில் உள்ள பல இடங்களை ஈரான் குறிவைத்துள்ளதாக ஈரான் அரசு தொலைக்காட்சி தெரிவித்துள்ளது.

ஆதரவு தளங்கள், கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையங்கள் மற்றும் உயிரியல் ஆராய்ச்சி மையம் ஆகியவை பிற இலக்குகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.

இஸ்லாமிய புரட்சிகர காவல்படை (IRGC) நீண்ட தூர ஏவுகணைகளைப் பயன்படுத்தி தாக்குதல் நடத்தப்பட்டதாக அரசு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

Minab 168
“மினாப் 168” விமானம் : தாக்குதலில் உயிரிழந்த சிறுவர்கள் உள்ளிட்ட பொதுமக்களை நினைவுகூர்ந்த ஈரானியர்கள்!
Thaiyiddi
யாழ். தையிட்டி விகாரை காணியை உரிமையாளர்களிடம் வழங்க நடவடிக்கை
whatsapp number
போக்குவரத்து விதிமீறல்கள் தொடர்பான வீடியோ ஆதாரங்களை பொதுமக்கள் சமர்ப்பிக்க விசேட வட்ஸ்அப் இலக்கம் அறிமுகம்!
Vedukkunari Mala
வெடுக்கு நாறியால் மீண்டும் இனமுரண்பாடு உருவாகும் - டக்ளஸ் எச்சரிக்கை!
canada
கனடாவில் வேலை வாங்கி தருவதாக மோசடி: மூவர் கைது
ndb bank
இலங்கையில் தனியார் வங்கியொன்றின் உள்ளக மோசடி: வெளியான அதிர்ச்சி தகவல்