கட்டாரிலுள்ள அமெரிக்க இராணுவத்தளங்கள் மீது ஈரான் தாக்குதல்!

ஈராக், கட்டாரிலுள்ள அமெரிக்க இராணுவத்தளங்களை ஈரான் தாக்குவதாக ஈரானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கட்டார் வான் பரப்பு மேலே வெடிப்பு சத்தங்கள் கேட்பதாக பி.பி.சி ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள அச்சுறுத்தலால் ஒரு பகுதி, வான்வெளியை தற்காலிகமாக மூடியுள்ளதாக கட்டார் வெளியுறவு அமைச்சகம் X தளத்தில் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்து.

கட்டாரிலுள்ள அமெரிக்க தளம் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல் : தாக்குதலை முறியடித்துள்ளதாக கட்டார் தெரிவிப்பு

தாக்குதலை முறியடித்துள்ளதாக கட்டார் தெரிவிப்பு

கட்டாரில் உள்ள அமெரிக்காவின் இராணுவ தளம் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதலை இன்று திங்கட்கிழமை (23) இரவு ஆரம்பித்துள்ளது.

இந்நிலையில், ஈரானின் ஏவுகணைத் தாக்குதல்களை முறியடித்துள்ளதாக கட்டாரின் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கட்டார் தலைநகர் டோஹாவின் தென்மேற்கே 24 ஹெக்டேயர் (60 ஏக்கர்) இல் அமைந்துள்ள அல் உதெய்த் விமானத் தளமானது அமெரிக்க மத்திய கட்டளையின் முன்னோக்கிய தலைமையகமாகும்.

1996 ஆம் ஆண்டு பாதுகாப்பு ஒத்துழைப்பு ஒப்பந்தத்தின் மூலம் இந்த இராணுவத் தளம் நிறுவப்பட்டது.

இது, மத்திய கிழக்கின் மிகப்பெரிய அமெரிக்க இராணுவத் தளமாகும்,

தற்போது இந்த விமானத்தளம் மீது ஈரான் ஏவுகணைகளை ஏவியுள்ளதுடன் வெற்றிகரமாக தாக்குதலை நடத்தியதாக ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளதாக ஈரானின் தஸ்னிம் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், ஈரானின் ஏவுகணைகளை தங்களது வான் பாதுகாப்பு மூலம் வெற்றிகரமாக முறியடித்துள்ளதாக கட்டார் தெரிவித்துள்ளது.

கட்டாரிலுள்ள இராணுவ தளம் சிறிய மற்றும் நீண்டதூர ஏவுகணையால் தாக்கப்பட்டதாகவும் ஆனால் உயிரிழப்புகள் எதுவும் இல்லையெனவும் பென்டகன் அறிவித்துள்ளது.

இதேவேளை, தமது பிரஜைகள் மற்றும் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில் கட்டார் வான்பரப்பு தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக அந்நாட்டு வௌிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

price
உச்சம் தொட்ட பச்சை மிளகாயின் விலை!
death
காதலன் முன்னிலையில் 17 வயது காதலி செய்த அதிர்ச்சி செயல்!
vehicle
வாகனங்களின் விலைகளில் ஏற்படவுள்ள மாற்றம்: வெளியான தகவல்!
colombo
தலைநகருக்கு வருபவர்களை கடத்தும் மர்ம கும்பல்: வெளியான அதிர்ச்சித் தகவல்
douglas devananda
முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கைது!
gold price
தங்க விலையில் ஏற்பட்ட திடீர் மாற்றம்!