ஹார்முஸ் ஜலசந்தியை மூடுவதற்கு ஈரானிய பாராளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது

ஹார்முஸ் ஜலசந்தியை மூடுவதற்கு ஈரானிய பாராளுமன்றம் ஞாயிற்றுக்கிழமை (22) வாக்களித்துள்ளதாக வெளிநாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஈரான் உட்பட பல மத்திய கிழக்கு நாடுகள் இந்த ‘ஹோமுஸ்’ ஜலசந்தி வழியாக எண்ணெய் ஏற்றுமதி செய்கின்றன.

அதன்படி, உலகின் பெரும்பாலான எண்ணெய் போக்குவரத்து இந்த ஜலசந்தி வழியாக நடைபெறுவதால், இது உலகின் ஒரு முக்கிய எண்ணெய் போக்குவரத்து பாதையாகக் கருதப்படுகிறது.

இருப்பினும், இந்த முடிவை செயல்படுத்துவதற்கான இறுதி முடிவு ஈரானின் உச்ச கவுன்சிலிடம் உள்ளது.

ஈரானிய அரசு செய்தி நிறுவனத்தால் ஞாயிற்றுக்கிழமை (22) இந்த முடிவு அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்கா தனது அணுசக்தி நிலையங்கள் மீது நடத்திய தாக்குதல்களுக்கு பதிலளிக்கும் விதமாக ஈரான் இந்த முடிவை எடுத்துள்ளது.

தேவைப்படும்போது இந்த முடிவு எடுக்கப்படும் என்று ஈரானின் புரட்சிகர காவல்படையின் தளபதி கூறியுள்ளார்.

எரிபொருள் விலை உயரும் அபாயம்?

உலகின் எரிபொருள் வர்த்தகத்தில் மிக முக்கிய பங்கு வகிக்கும் ஹார்முஸ் ஜலசந்தி எனப்படும் ஹார்முஸ் நீர்முனையை மூடுவதற்கு ஈரான் நாடாளுமன்றம் அனுமதி அளித்துள்ளது.

இதனால் பெட்ரோல், டீசல் விலை மிக கடுமையாக உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

fuel
எம்.பி.க்களுக்கான எரிபொருள் கொடுப்பனவு தொடர்பில் வெளியான தகவல்!
weather
கடும் வெப்ப அலை தொடர்பாக விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை: புவியியல் பேராசிரியர் நாகமுத்து பிரதீபராஜா
war
இந்தியா வரவிருந்த ஈரான் விமானம் மீது அமெரிக்கா அதிரடித் தாக்குதல்
food price
இன்று நள்ளிரவு முதல் உணவுப் பொருட்களின் விலைகள் அதிகரிப்பு!
gun shoot
நீர்கொழும்பு பகுதியில் நிறுத்தாமல் சென்ற கார் மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு!
Ishara
இஷாரா செவ்வந்திக்கு பிறந்தநாள் கொண்டாட்டத்தை ஏற்பாடு செய்த CID-யின் பொறுப்பதிகாரி எதிராக நடவடிக்கை!