🔴 UPDATE 🔴 VIDEO இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல். பலர் உயிரிழப்பு!

ஈரான் இஸ்ரேல் மீது ஏவுகணை தாக்குதல்களை மேற்கொண்டுள்ளது.

ஜெரூசலேத்தில் வெடிப்பு சத்தங்களை கேட்க முடிந்ததாகவும் டெல் அவியில் கரும்புகை தென்படுவதாகவும் பிபிசி தெரிவித்துள்ளது.

40க்கும் அதிகமானவர்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என தகவல்கள் வெளியாகின்றன.

ஏவுகணைகள் கட்டிடங்கள் மீது விழுந்துள்ளன,இதனால் கட்டிடங்களிற்கு சேதம் ஏற்பட்டுள்ளது,உயிரிழப்புகள் இல்லை ஆனால் பொதுமக்கள் காயமடைந்துள்ளனர் ஆனால் பெருமளவு அழிவுகள் ஏற்பட்டுள்ளன என இஸ்ரேலின் ஹரெட்ஸ் செய்தித்தாளின் செய்தியாளர் ஒருவர் பிபிசிக்கு தெரிவித்துள்ளார்.

இதேவேளை பெருமளவு ஏவுகணைகள் இஸ்ரேலின் இரண்டாவது மிகப்பெரிய நகரமான டெல்அவியை தாக்கின என தெரிவித்துள்ள டெலிகிராவ்இஸ்ரேல் இது பொதுமக்கள் மீதான தாக்குதல் என தெரிவித்துள்ளது என குறிப்பிட்டுள்ளது.

நகரின் மத்தியில் உள்ள உயரமான கட்டிடமொன்று சேதமடைந்துள்ளதை காண்பிக்கும் படங்கள் வெளியாகியுள்ளன.

இதேவேளை சனிக்கிழமை காலையிலும் தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளன ஏவுகணைதாக்குதல்களில் இது தப்புவதற்காக ஜெரூசலேத்தில் புகலிடங்களை நோக்கி ஓடியுள்ளனர்.

இஸ்ரேலில் மக்கள் வசிக்கும் பகுதிகளை நோக்கி ஏவுகணை தாக்குதல்களை மேற்கொண்டதன் மூலம் ஈரான் எல்லை மீறிவிட்டது என இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதல் பலர் உயிரிழப்பு!

இஸ்ரேலின் ரஹமட் கான் நகரில் ஏவுகணை சிதறல்;கள் தாக்கியதன் காரணமாக பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.

டெல்அவிக்கு கிழக்காக உள்ள பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

காயமடைந்த பலர் அந்த பகுதியிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

177d533f-562e-4df3-b574-d98d574432e5
வவுனியாவில் கிணறு ஒன்றில் இருந்து உயர்தர மாணவி சடலமாக மீட்பு!
New Project t (3)
உலகில் உயர்ந்த வாகன விலையை கொண்ட நாடுகளின் பட்டியலில் இலங்கை!
New Project t
கனடாவில் பொலிசாரால் தேடப்படும் தமிழ் இளைஞன்!
mullaithevu-boy-issue
முல்லைத்தீவு இளைஞனின் சர்ச்சைக்குரிய மரணம்...! பொலிஸ் ஊடக பிரிவினரால் வெளியிடப்பட்ட அறிக்கை
New Project t (4)
முல்லைதீவில் இளைஞன் தாக்கப்பட்டு மரணமடைந்தமை தொடர்பில் NPP யின் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் வெளியிட்ட அறிவிப்பு!
mullaithevu
முல்லைத்தீவில் சடலமாக மீட்கப்பட்ட தமிழ் இளைஞன்: இராணுவத்தினர் மீது அதிரடி நடவடிக்கை. 5 இராணுவத்தினர் கைது