ஈரான் யுத்தநிறுத்தத்தை மீறிவிட்டது கடும் பதிலடிக்கு உத்தரவு – இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர்

ஈரான் யுத்தநிறுத்தத்தை மீறியதாக குற்றம்சாட்டியுள்ள இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் கட்ஸ் கடுமையான பதிலடியை கொடுக்குமாறு இஸ்ரேலிய இராணுவத்திற்கு உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

ஈரானிலிருந்து இஸ்ரேலை நோக்கி ஏவுகணைகள் ஏவப்பட்டதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

இதுவரைகள் உயிரிழப்புகள் காயங்கள் குறித்த எந்த அவசரவேண்டுகோளும் தங்களிற்கு வரவில்லை என இஸ்ரேலின் அவசரசேவை தெரிவித்துள்ளது.

ஈரானிலிருந்து ஏவுகணைகள் -இஸ்ரேல் இராணுவம் தெரிவிப்பு

ஈரானிலிருந்து ஏவப்பட்ட ஏவுகணைகள் இஸ்ரேலை நோக்கிவருவதாக இஸ்ரேலிய இராணுவம் அறிவித்துள்ளது.

அவற்றை இடைமறித்து செயல் இழக்கச்செய்யும் நடவடிக்கைகள் இடம்பெறுவதாக இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது.

மறுஅறிவித்தல் வரும் வரை பொதுமக்களை பாதுகாப்பான இடங்களில் இருக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளோம் என இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது.

ஈரான் குறித்த இலக்குகளை எய்தியுள்ளோம் – யுத்த நிறுத்தத்திற்கு இணங்குகின்றோம் – இஸ்ரேல்

ஈரான் குறித்த தனது இலக்குகளை எய்திய பின்னர் யுத்த நிறுத்தத்திற்கு இணங்கியுள்ளதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

ஈரானிடமிருந்து இஸ்ரேலிற்கு உருவாகிய இருப்பு குறித்த இரட்டை ஆபத்துக்களான அணுவாயுத ஆபத்து மற்றும் கண்டங்களிற்கு இடையிலான ஏவுகணை ஆபத்து ஆகியவற்றை அகற்றியுள்ளதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

ஈரானின் இராணுவதலைமைக்கு கடும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளோம்,அந்த நாட்டின் பல இலக்குகளை அழித்துள்ளோம் என இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

kovil news
டிஜிட்டல் தீர்த்தம்: கோவில் கருவறையில் தானியங்கி தீர்த்தம் வழங்கும் இயந்திரம்!
trinco issue
திருகோணமலை விகாரை விவகாரம்: ரீட் மனுவை மீண்டும் அழைக்க உத்தரவு
namal
பிரித்தானியாவில் நாமலுக்கு முட்டுக்கட்டை போட்ட தமிழ் புலம்பெயர் அமைப்புகள்!
Akuregoda gun shoot
அக்குரேகொடை இரட்டை கொலை - அடையாளம் காணப்பட்டுள்ள துப்பாக்கிதாரி!
gas issue
சமையல் எரிவாயு தட்டுப்பாடு: கடும் சிரமத்தில் நுகர்வோர்
Andrew
பிரித்தானிய மன்னரின் சகோதரர் கைது!