🔴 VIDEO 🔴 PHOTO இஸ்ரேல், ஈரான் போர். யாழ் மாவட்டத்தில் பதற்றம்!

போதியளவு எரிபொருள் வருகை தரவுள்ளதாகவும் செயற்கையான தட்டுப்பாட்டை ஏற்படுத்த வேண்டாம் என யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.

யாழ். மாவட்டத்தில் பெற்றோல் நிரப்பு நிலையங்களில் திடீரென மக்கள் வரிசைகளில் நின்று வாகனங்களுக்கு பெற்றோல் நிரப்புவதில் முண்டியடிக்கின்றனர்.

இந்நிலையிலேயே யாழ். மாவட்ட அரச அதிபர் அவசர வேண்டுகோள் ஒன்றை ஊடகங்கள் வாயிலாக விடுத்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் கூறுகையில்,

யாழ். மாவட்டத்தில் திங்கட்கிழமை (16) எரிபொருளுக்காக ஒரு செயற்கை தட்டுப்பாட்டை உருவாக்கியிருப்பதாக அறிந்தேன்.

இன்றையதினம் அநுராதபுரத்திலிருந்து 23 பௌசர்களில், ஒரு பௌரில் 6 ஆயிரத்து 63 லீற்றர் வீதம் ஒரு இலட்சத்து 51 ஆயிரத்து 800 லீற்றர் பெற்றோல் யாழ். மாவட்டத்திற்கு எடுத்து வரப்பட்டுள்ளது.

குறித்த எரிபொருட்கள் யாழ். மாவட்டத்திலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றது.

இதேவேளை, நாளையும் இதே அளவான எரிபொருள் எடுத்துவரப்பட்டு யாழ். மாவட்டதிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு வழங்கப்படவுள்ளது.

இதேபோன்று அண்மையில் திறந்து வைக்கப்பட்ட காங்கேசன்துறை எரிபொருள் சேமிப்பு நிலையத்திற்கு தொடர்ச்சியாக எரிபொருள் எடுத்து வரப்பட்டு சேமிக்கப்பட்டு வருகின்றது.

ஆகவே யாழ். மாவட்ட மக்கள் செயற்கையான எரிபொருள் தட்டுப்பாட்டை உருவாக்க வேண்டாமென வேண்டுகோள் விடுக்கின்றேன்.

இது தொடர்பாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் வடபிராந்திய அலுவலகம் தேவையான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றது. ஆகவே மக்கள் செயற்கையான தட்டுப்பாட்டு நிலைவரத்தை ஏற்படுத்த வேண்டாமென பொதுமக்களை வினயமாக கேட்டுக்கொள்ளுகின்றேன்.

எரிபொருளுக்கு நீண்ட வரிசை!

யாழ் மாவட்டத்தின் அனைத்து எரிபொருள் நிரப்பு நிலையங்களிலும் எரிபொருளை பெற்றுக்கொள்வதத்காக நீண்ட வரிசைகள் மீண்டும் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறிப்பாக யாழ் நகர், மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள பலநோக்கு கூட்டுறவுச்சங்களதும், தனியாரதும் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் மக்கள் நீண்ட வரிசையில் நின்று எரிபொருளை பெற்றுவருவதாக கூறப்படுகிறது.

செயற்கையான தட்டுப்பாட்டை ஏற்படுத்த வேண்டாம்.

இதேவேளை மத்திய கிழக்கில் உருவாகியுள்ள போர்ப்பதற்ற சூழல் எரிபொருளின் விநியோக தளம்பலை ஏற்படுத்திவிடும் என்ற அச்சத்தை மக்களுக்கு ஏற்படுத்தியுள்ளது.

இதனால் நாடளாவிய ரீதியில் எரிபொருளுக்காக மக்கள் மிக நீண்ட வரிசையில் காத்திருப்பதை பரவலாக அவதானிக்க முடிகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

gun shoot
இரத்தினபுரி - கலவான பகுதியில் துப்பாக்கிச் சூடு: இருவர் வைத்தியசாலையில் அனுமதி!
trump
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பெயரில் இந்தியாவில் வாக்காளர் அட்டை!
srilanka
தெற்காசியாவில் வாழ்வதற்கு மிகவும் செலவு மிகுந்த நாடுகளின் பட்டியலில் இலங்கைக்கு இரண்டாவது இடம்!
mannar
மன்னாரில் கத்தோலிக்க குருவின் உடையில் வந்து நிதி சேகரிப்பில் ஈடுபட்ட நபருக்கு நேர்ந்த கதி!
anura
போதைப்பொருட்களுக்கு எதிரான சவாலை எதிர்கொள்ளத் தயார்: ஜனாதிபதி வலியுறுத்தல்
pugi
யாழில் மீற்றர் வட்டிக்கு பணம் வாங்கி பப்ஜி விளையாடிய முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் உயிர்மாய்ப்பு!