மத்தியக் கிழக்கில் இப்போது மீண்டும் பதற்றம் வெடித்து இருக்கிறது. அங்கு இஸ்ரேல் கடந்த சில ஆண்டுகளாகவே சுற்றி தன்னை எதிர்க்கும் நாடுகள் அல்லது தீவிரவாத குழுக்கள் மீதான தாக்குதல்களைத் தீவிரப்படுத்தி வருகிறது. ஏற்கனவே ஹவுதி, ஹமாஸ் மீதான தாக்குதல்கள் தீவிரப்படுத்தப்பட்ட நிலையில், இப்போது சிரியா மீதும் தாக்குதலை ஆரம்பித்துள்ளது.
இந்தநிலையில் நேற்றைய தினம் சிரியா தலைநகர் டமாஸ்கஸில் அமைந்துள்ள அரசு கட்டுப்பாட்டில் இயங்கும் டிவி கட்டிடம் ஒன்றின் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. அப்போது நேரலையில் செய்தி கொடுத்துக்கொண்டு இருந்த பெண் தொகுப்பாளர் ஒருவர் தாக்குதலால் பாதியிலேயே அங்கிருந்து வெளியேற வேண்டி இருந்தது. இது தொடர்பான வீடியோவும் இணையத்தில் பரவி வருகிறது.
Footage shows the moment of the Israeli airstrike in Damascus a short while ago. https://t.co/x08ISPkg1R pic.twitter.com/4fifRF0eNV
— Emanuel (Mannie) Fabian (@manniefabian) July 16, 2025