ஈரானிற்குள் ஆளில்லா விமான தளங்களை அமைத்த இஸ்ரேலின் மொசாட்!

இஸ்ரேல் ஈரானின் அணுஉலைகள் இராணுவ கட்டமைப்புகள்மீதான தாக்குதல் நடவடிக்கைகளிற்காக பலவருடங்களாக திட்டமிடலில் ஈடுபட்டது என அந்த நாட்டின் பாதுகாப்புஅதிகாரிகள் டைம்ஸ் ஒவ் இஸ்ரேலிற்கு தெரிவித்துள்ளனர்.

இது குறித்து டைம்ஸ் ஒவ் இஸ்ரேல் மேலும் தெரிவித்துள்ளதாவது.

இஸ்ரேல் ஈரானின் அணுஉலைகள் இராணுவ கட்டமைப்புகள்மீதான தாக்குதல் நடவடிக்கைகளிற்காக பலவருடங்களாக திட்டமிடலில் ஈடுபட்டது பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஈரானிற்குள் ஆளில்லா விமானதளமொன்றை மொசாட் உருவாக்கியது துல்லியமாக தாக்கும் ஆயுதங்களையும் கொமாண்டோக்களையும் ஈரானிற்குள் கொண்டு சென்றது என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த தாக்குதல் திட்டம் வெற்றிபெறுவது மொசாட்டும் இஸ்ரேலிய இராணுவமும் இணைந்து முன்னெடுத்த திட்டமிடலிலேயே தங்கியிருந்தது.

ஈரான் தலைநகர் டெஹ்ரானிற்கு அருகில் மொசாட் ஆளில்லா விமானதளமொன்றை ஏற்படுத்தியது என இஸ்ரேலிய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

இந்த ஆளில்லா விமானங்களை நேற்றிரவு இஸ்ரேல் பயன்படுத்தியது அதிலிருந்து ஏவுகணைகளை ஈரானின் இலக்குகளை நோக்கி செலுத்தியது.

மேலும் ஆயுதஅமைப்புகளை ஏற்றிச்செல்லும் வாகனங்கள் ஈரானிற்குள் கொண்டு செல்லப்பட்டன.இவற்றை பயன்படுத்தி ஈரானின் வான்வெளி பாதுகாப்பு அமைப்பு முறைகளை செயல் இஸ்ரேல் செயல் இழக்க செய்தது.

இது இஸ்ரேலிய விமானங்கள் ஈரானின் வான்பரப்பில் சுதந்திரமாக செயற்படக்கூடிய நிலையை ஏற்படுத்தியது.

மூன்றாவது இரகசிய முயற்சியாக இஸ்ரேலின் புலனாய்வு அமைப்பான மொசாட்டின் கொமான்டோக்கள் மத்திய ஈரானில் உள்ள விமானஎதிர்ப்பு நிலைகளிற்கு அருகில் துல்லியமாக தாக்க கூடிய ஏவுகணைகளை நிலைகொள்ளச்செய்திருந்தனர்.

முன்னர் ஒருபோதும் இல்லாத மிகவும் புதுமையான சிந்தனைமிகவும் துணிச்சலான திட்டமிடல் நவீன தொழில்நுட்பங்களை மிகவும் துல்லியமாக பயன்படுத்துதல்விசேட படைப்பிரிவினர் உள்ளுர் புலனாய்வாளர்களின் கண்களில் மண்ணை தூவிட்டு ஈரானின் மையப்பகுதியில் செயற்பட்ட முகவர்கள் ஆகியவற்றினை இந்த நடவடிக்கை நம்பியிருந்தது என அதிகாரியொருவர் தெரிவித்தார்.

ஈரானை தாக்கியது இஸ்ரேல்! தளபதி கொல்லப்பட்டார்.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

New Project t (2)
தென்னிலங்கையை உலுக்கிய துப்பாக்கிச் சூட்டில் அதிகரிக்கும் பலி எண்ணிக்கை!
New Project t (1)
ஜனாதிபதியை குறிவைத்து பரப்பப்படும் தகவல்கள்: சி.ஐ.டியில் முறைப்பாடு!
New Project t
நல்லூருக்கு செல்வோருக்கு பொலிஸார் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!
varalakshmi-poojai
வரலட்சுமி நோன்பு: செல்வ வளம் தரும் 3 புனிதப் பொருட்களின் தெரியுமா?
vavuniya-thump
அகில இலங்கை முய் தாய் போட்டிகளில் தேசிய மட்டத்தில் வவுனியா விபுலானந்தா கல்லூரி மாணவிகள் சாதனை: அபுதாபியில் நடைபெறும் போட்டிக்கும் தெரிவு
New Project t (3)
இலங்கையிலுள்ள சீனர்களுக்கு சீனத் தூதரகம் விடுத்துள்ள முக்கிய அறிவுறுத்தல்!