லிட்ரோ மற்றும் லாஃப்ஸ் எரிவாயு விலை: வெளியான அறிவிப்பு

மத்திய கிழக்கில் போர் தீவிரமடைந்து வரும் நிலையில், புதிய எரிவாயு கையிருப்பு நாட்டிற்கு வந்தடைந்த நிலையில் மார்ச் இறுதி வரை விலையில் மாற்றம் இருக்காது என்று லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் சன்ன குணவர்தன அறிவித்துள்ளார்.

சமீபத்தில் ரூ.300 மட்டுமே விலை உயர்த்தப்பட்டதால், இந்த மாத இறுதி வரை எரிவாயு விலையில் எந்த மாற்றமும் இருக்காது என்றும் கூறியுள்ளார்.

இருப்பினும், விலை உயர்த்தப்பட்டாலும், அது குறிப்பிடத்தக்க உயர்வாக இருக்காது என்றும், புத்தாண்டை கருத்தில் கொண்டு ஏப்ரல் நடுப்பகுதி வரை தற்போதைய விலைகள் நீடிக்கக்கூடும் என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.

33,000 மெட்ரிக் டொன் எரிவாயுவை ஏற்றிக்கொண்டு ஒரு கப்பல் மார்ச் 20 அன்று மாலைத்தீவை வந்தடைந்ததாகவும், அங்கிருந்து கொழும்பு வரும் சிறிய கப்பல்களில் மீண்டும் ஏற்றப்பட்டதாகவும் கூறியுள்ளார்.

இதேவேளை, தற்போதைய நிலைமை கணிக்க முடியாததாகவும், நிலையற்றதாகவும் இருப்பதால், முன்னறிவிப்பை வழங்குவது சாத்தியமற்றது என்று லாஃப்ஸ் எரிவாயு (LAUGFS Gas) நிறுவனத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில், பீதியால் நுகர்வோர் கூடுதலாக சிலிண்டர்களை வாங்கி வைப்பதனால் நெருக்கடி எற்படுவதாகவும், பொதுமக்கள் பொறுப்புடன் நடந்துகொள்ளுமாறு அரசாங்க அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

semmani
யாழ். வரும் ஐரோப்பிய பிரதிநிதிகள் செம்மணி புதைகுழியை பார்வையிடவுள்ளதாக தகவல்!
jaffna university
சிங்கள மயமாக்கப்பட்டு வரும் யாழ். பல்கலைக்கழகம் - வெளியான அதிர்ச்சித் தகவல்
benjamin netanyahu
ஈரான் மீதான தாக்குதலை தற்காலிகமாக நிறுத்த இஸ்ரேலியப் பிரதமர் நெதன்யாகு இணக்கம்!
anura
அமெரிக்க போர் விமானங்கள் தரையிறங்குவதற்கான கோரிக்கையை நிராகரித்த ஜனாதிபதி!
bank
வங்கிகளின் புதிய நேரக் கட்டுப்பாடு தொடர்பான அறிவிப்பு: இலங்கை வங்கிகள் சங்கம்
sathosa
அத்தியாவசிய உணவுப் பொருட்கள் சிலவற்றின் விலை குறைப்பு!