ஆன்லைன் டெலிவரி என்ற பெயரில் போதைப்பொருள் கடத்தல்: யாழில் 1,800 போதை மாத்திரைகளுடன் நபர் கைது!

யாழ்ப்பாணம் பகுதியில் மிக நூதனமான முறையில் போதைப்பொருள் வியாபார நடவடிக்கையில் ஈடுபட்டுவந்த ஒருவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் – சிவன்கோயிலை அண்மித்த பகுதியில் நேற்று (28.05.2026) இந்த கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது

இதன்போது அவரிடமிருந்து 1800 போதை மாத்திரைகளை யாழ்ப்பாணம் காவல்துறை போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினர் கைப்பற்றியுள்ளனர்.

இணைய சேவையின் ஊடாக பொதிகள் விநியோகிக்கப்படுவதாக கூறி போதைப்பொருள் விற்பனை செய்யப்படுவதாக யாழ்ப்பாணம் காவல்துறையினருக்கு தகவல் ஒன்று கிடைக்கப்பெற்றுள்ளது.

இதையடுத்து பொதி விநியோக சேவையின் ஊடாக கொழும்பில் இருந்து பொதிசெய்யப்பட்டு யாழ்ப்பாணம் குருநகர் பகுதியில் இருக்கும் தபால் நிலையம் ஒன்றுக்கு கிடைக்கப்பெற்ற சந்தேகத்திற்கிடமான பொதி ஒன்றை காவல்துறையினர் சோதனைக்கு உட்படுத்தினர்.

அதில் 1800 போதை மாத்திரைகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இந்நிலையில் குறித்த போதை மாத்திரைகளை கொள்வனவு செய்ததாக கூறப்படும் நபர் ஒருவரும் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

SriLankaPolice
13 நாடுகளில் தலைமறைவாக உள்ள 112 குற்றவாளிகள்: 2027க்குள் நாட்டிற்கு அழைத்துவர நடவடிக்கை என பொலிஸ் அறிவிப்பு
NamalRajapaksa
நாமல் ராஜபக்சவுக்கு எதிரான பணச்சலவை வழக்கு: சட்ட மா அதிபரின் ஆலோசனை இன்னும் கிடைக்கவில்லை
Mullaitviu
முல்லைத்தீவு கடலில் காணாமல்போன 3 மீனவர்கள்: இலங்கை எல்லை தாண்டி அடித்துச் செல்லப்பட்டதாகச் சந்தேகம்
NegomboPrison
கட்டுப்பாட்டை இழந்த நீர்கொழும்பு சிறைச்சாலை: மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அறிக்கை சுட்டிக்காட்டும் அதிர்ச்சித் தகவல்கள்
Trincomalee
திருகோணமலை நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பு: மூவர் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதி
CustodialDeath
பொலிஸ் தடுப்புக் காவல் மரணம்: OIC உள்ளிட்ட 3 அதிகாரிகளுக்கு மனித உரிமைகள் ஆணைக்குழு அழைப்பு!