நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்டு வரும் குற்றம் மற்றும் போதைப்பொருள் தடுப்பு விசேட நடவடிக்கையின் கீழ், பல்வேறு குற்றச் சம்பவங்களில் நேரடியாக தொடர்புடைய 16 நபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இந்த சந்தேக நபர்கள் நேற்று கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த நடவடிக்கையின் போது 32,201 நபர்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இதன்போது பல்வேறு சம்பவங்கள் தொடர்பாக 736 நபர்களும் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட 271 பேரும் கைது செய்யப்பட்டன.
அத்துடன் மதுபோதையில் மற்றும் கவனக்குறைவாக வாகனம் செலுத்திதற்காக 48 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
