உத்தரப் பிரதேசம், காசிப்பூர் மாவட்டத்தில் நிலத்தகராறு காரணமாக, நபர் ஒருவர் தனது பெற்றோர் மற்றும் சகோதரியைக் கோடாரியால் தாக்கிக் கொலை செய்த சம்பவமொன்று பதிவாகியுள்ளது.
தாக்குதலுக்குப் பின், குறித்த நபர் சம்பவ இடத்திலிருந்து தப்பி ஓடிவிட்டதாகவும், அவரைக் கண்டுபிடிப்பதற்கான தேடுதலை உத்தரப் பிரதேச காவல்துறையினர் ஆரம்பித்துள்ளதாகவும், அந்த நாட்டுச் செய்திகள் தெரிவிக்கின்றன.

சந்தேக நபர் தனது தந்தை, தாய் மற்றும் சகோதரியைக் கோடாரியால் தாக்கியதில், மூவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்த மூவரின் உடல்களும் பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், குடும்பத்திற்குள் நீண்ட காலமாக நிலவி வந்த நிலத்தகராறே இந்த கொலைகளுக்குக் காரணம் என, காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் முன்னெடுத்துள்ளதாக இந்தியச் செய்திகள் தெரிவிக்கின்றன.