🔴 VIDEO விமானம் விழுந்து நொறுங்கிய இடத்தை பார்வையிட்ட மோடி!

இந்தியாவின் அஹமதாபாத் விமான விபத்தில் பாதிக்கப்பட்டவர்களை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி நேரில் ஆறுதல் தெரிவித்தார்.

குஜராத் மாநிலம் அகமதாபத்தில் இருந்து லண்டன் விமான நிலையத்திற்கு புறப்பட் ஏர் இந்தியா விமானம் டேக்ஆஃப் ஆன சில நிமிடங்களில் கீழே விழுந்து நொறுங்கியது.

இதில் 242 பேர் பயணம் செய்த நிலையில், விபத்தில் ஒருவரை தவிர்த்து 241 பேரும் உயிரிழந்ததாக அதிகார பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், அஹமதாபாத் விமான நிலையத்துக்கு இன்று (13.06.2025) காலை சென்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, விமான விபத்து நடந்த இடத்தில் நடைபெற்று வரும் மீட்புப் பணிகளை பார்வையிட்டார்..

பல உயிர்களை இழந்தது “வார்த்தைகளுக்கு அப்பாற்பட்டது” என்று தமது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

மேலும், அகமதாபாத்தில் ஏற்பட்ட விமான விபத்தில் நாங்கள் அனைவரும் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளோம். இவ்வளவு திடீர் மற்றும் இதயத்தை உடைக்கும் வகையில் பல உயிர்களை இழந்தது வார்த்தைகளுக்கு அப்பாற்பட்டது.

அவர்களை இழந்து வாடும் அனைத்து குடும்பங்களுக்கும் அவர்களின் வலியை நாங்கள் பகிர்ந்து கொள்கிறோம்.

மேலும் இந்த வெற்றிடம் பல ஆண்டுகளுக்கும் உணரப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

school
பாடசாலையில் மாணவனின் அடாவடியால் ஆசிரியர் வைத்தியசாலையில் அனுமதி!
New Project t (5)
110 வயதான இலங்கையின் மிக வயதான நபர்!
New Project t (3)
பாடசாலை கட்டடம் இடிந்து வீழ்ந்ததில் பலர் படுகாயம் - மீட்புப் பணிகள் தீவிரம்
New Project t (2)
நாளை முதல் அமுலுக்கு வரும் முக்கிய நடைமுறை!
New Project t (27)
கிளிநொச்சியில் குண்டு வெடிப்பு: இருவர் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதி!
New Project t (26)
பாடசாலை மாணவர்கள் தொடர்பில் வெளியான அதிர்ச்சித் தகவல்!