🔴 PHOTO கழிவுப் பொருட்களுக்கு தீ வைத்த மாநகரசபையினர் – வீதியால் செல்லும் மக்கள் அவதி!

மானிப்பாய் பிரதேச சபை எல்லைக்குட்பட்ட கல்லூண்டாய் பகுதியில் யாழ்ப்பாணம் மாநகர சபையினர் கழிவுப் பொருட்களை சேகரித்து வருகின்றனர்.

குறித்த கழிவு சேகரிக்கும் பகுதிக்கு தொடர்ச்சியாக தீ வைத்து வருவதால் வீதியால் செல்லும் பயணிகளும், அண்டியுள்ள பகுதிகளில் வசிக்கும் மக்களும் பல்வேறு இன்னல்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

அந்தவகையில் இன்றையதினம் (20) குப்பை மேட்டுக்கு தீ வைத்ததால் அதன்மூலம் வெளியான புகை வீதியெங்தும் பரவியதால் வீதியால் செல்லும் மக்கள் அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளனர்.

மாநகரசபையின் இவ்வாறான அநாகரீகமான செயற்பாடுகள் குறித்து பல தடவைகள் செய்திகள் வெளியாகியபோதும் அவர்கள் தொடர்ந்தும் இவ்வாறு செய்வது மக்களை பற்றிய அக்கறை இல்லாத தன்மையை எடுத்துக் காட்டுகின்றது என மக்கள் தெரிவித்தனர்.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

police
பாதிக்கப்பட்ட மக்களுக்காக கொண்டுசெல்லப்படும் பொருட்கள்: கொள்ளையடிப்பவர்களுக்கு எதிராக நடவடிக்கை!
namal
நாடாளுமன்றத்தை கூட்டுமாறு நாமல் கோரிக்கை
weather
சில குறிப்பிட்ட பகுதிகளுக்கு செல்ல வேண்டாம்: விடுக்கப்பட்ட எச்சரிக்கை
rain
நாளை முதல் தீவிரமடையும் மழை: வளிமண்டலவியல் திணைக்களம்
flood
வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!
lightning
பலத்த மின்னல் தாக்கம் குறித்து விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!