தமிழ் மக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட படுகொலைக்கு முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச பதில் சொல்ல வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் தெரிவித்துள்ளார்.
குறித்த விடயத்தை இன்று (30) நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் குறிப்பிட்டுள்ளார்.,
நானும் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவும் சிறந்த அரசியல் நண்பர்கள். அவரை கண்டால் கதைக்காமல் செல்ல முடியாது. ஆனால் அவரின் தந்தை மகிந்த ராஜபக்ச தமிழர்களின் படுகொலைக்கு பதில்சொல்ல வேண்டும்.
செம்மணியில் இருந்து 33 மனித எலும்புக் கூடுகள் மீட்கப்பட்டுள்ளன. அங்கு உண்மையில் மக்கள் கொன்று புதைக்கப்பட்டுள்ளனர். அதற்கு நானும் சாட்சி, எனது தந்தையும் அழைத்துச் செல்லப்பட்டு கொல்லப்பட்டுள்ளார்.
இதேவேளை, சோதனை செய்யமல் விடுவிக்கப்பட்ட 323 கொள்கலன்களில் இருந்தது என்னவென்று பட்டியல் ஒன்றையே என்னால் தரமுடியும். 15 ஆண்டுகாக வெளிவராமல் இருந்து தமிழ் மக்களின் தங்கம் எங்கிருந்து வந்தது.
அவை அனைத்து வேறு ஒரு நாட்டில் இருந்தே கொண்டுவரப்பட்டுள்ளது. அது குறித்த அனைத்து தகவல்களும் என்னால் வழங்க முடியும். ஆனால் எனக்கு பயமாக இருக்கிறது ஆனால் நான் கொல்லப்படுவேன் என்று பயப்படவில்லை. அவர்கள் என்னை மீண்டும் மீண்டும் தேவையற்ற வழக்குகளில் இழுக்கிறார்கள்.
என்னை எம்.பி. பதவியிலிருந்து அகற்றுவதன் மூலம் உண்மை வெளிவருவதைத் தடுக்க முயற்சிக்கிறார்கள்” என தெரிவித்துள்ளார்.