🔴 VIDEO பெருந்திரளான ஆதரவாளர்களுக்கு மத்தியில் சி.ஐ.டியிலிருந்து வௌியேறினார் நாமல் ராஜபக்ஷ!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரான நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச, குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திலிருந்து வெளியேறியுள்ளார்.

இன்று காலை குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையான நிலையில், 4 மணி நேரம் வாக்குமூலம் அளித்த பின்னர் அங்கிருந்து வெளியேறியுள்ளார்.

போதைப்பொருள் கடத்தல் மற்றும் பாதாள உலகத் தலைவரான கெஹெல்பத்தர பத்மே என்ற மண்தினு பத்மசிறி பெரேராவுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்ததாகத் தெரிவிக்கப்படும் சம்பவம் தொடர்பாக வாக்குமூலம் பதிவு செய்ய நாமல், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டிருந்தார்.

பத்மேவுடன் தொடர்பு கொண்டிருந்ததாகத் தெரிவிக்கப்படும் சம்பவம் தொடர்பாக முன்னாள் அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவிடம் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது.

இந்நிலையில், கெஹெல்பத்தர பத்மேவுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்ததாகத் தெரிவிக்கப்படும் ஆறு சக்திவாய்ந்த அரசியல்வாதிகளும் அடுத்த சில நாட்களில் தங்கள் வாக்குமூலங்களைப் பதிவு செய்யக் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு அழைக்கப்பட உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது

Related Posts :

Special News :

Entertainment :

Special News

semmani
யாழ். வரும் ஐரோப்பிய பிரதிநிதிகள் செம்மணி புதைகுழியை பார்வையிடவுள்ளதாக தகவல்!
jaffna university
சிங்கள மயமாக்கப்பட்டு வரும் யாழ். பல்கலைக்கழகம் - வெளியான அதிர்ச்சித் தகவல்
benjamin netanyahu
ஈரான் மீதான தாக்குதலை தற்காலிகமாக நிறுத்த இஸ்ரேலியப் பிரதமர் நெதன்யாகு இணக்கம்!
anura
அமெரிக்க போர் விமானங்கள் தரையிறங்குவதற்கான கோரிக்கையை நிராகரித்த ஜனாதிபதி!
bank
வங்கிகளின் புதிய நேரக் கட்டுப்பாடு தொடர்பான அறிவிப்பு: இலங்கை வங்கிகள் சங்கம்
sathosa
அத்தியாவசிய உணவுப் பொருட்கள் சிலவற்றின் விலை குறைப்பு!