🔴 UPDATE 🔴 PHOTO கொழும்பு மாநகர சபையின் புதிய மேயர்!

கொழும்பு மாநகர சபையின் (CMC) புதிய மேயராக தேசிய மக்கள் சக்தியின் (NPP) விராய் காலி பால்தசார் (Vraie Cally Balthazaar) தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

117 உறுப்பினர்களைக் கொண்ட கொழும்பு மாநகர சபையில் பெரும்பான்மை வாக்குகளை பெற்று அவர் புதிய மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

அதன்படி, சற்று முன்னர் நடந்த இரகசிய வாக்கெடுப்பில் அவர் 61 வாக்குகளை பெற்றார்.

அவரை எதிர்த்துப் போட்டியிட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளர் ரிசா சாரூக் 54 வாக்குகளை பெற்றார்.

சுமார் ஒரு மணி நேர விவாதத்திற்குப் பின்னர், இன்று அதன் தொடக்க அமர்வின் போது கொழும்பு மாநகர சபையின் மேயரைத் தேர்ந்தெடுப்பதற்கான இரகசிய வாக்கெடுப்புக்கு உடன்பாடு எட்டப்பட்டது.

மே 06 ஆம் திகதி நடைபெற்ற உள்ளூராட்சி தேர்தலில் கொழும்பு மாநகர சபையில் NPP 48 இடங்களையும் SJB 29 இடங்களையும் பெற்றிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

தடங்களுக்கு மனம் வருந்துகிறோம்!! 🙏

ஆயிரக்கணக்கான மக்கள் ஒரே நேரத்தில் வருகையின் காரணமாக எமது இணையதளம் (A7TV.com) பல மணி நேரம் செயல்படாமல் இருந்தது. இப்போது அனைத்தும் சரி செய்யப்பட்டுள்ளது! ஒரே நேரத்தில் எத்தனை ஆயிரம் பேரும் இங்கே வரக்கூடியதாக செயல்வடிவம் கொடுக்கப்பட்டுள்ளது

Related Posts :

Special News :

Entertainment :

Special News

ndb bank
இலங்கையில் தனியார் வங்கியொன்றின் உள்ளக மோசடி: வெளியான அதிர்ச்சி தகவல்
Suresh Saleh
சுரேஷ் சலே மேன்முறையீட்டு நீதிமன்றில் மனுத் தாக்கல்!
iran war
போரை நிறுத்துவதற்கான அமைதி ஒப்பந்தம் தொடர்பில் வெளியான தகவல்!
food price
இன்று நள்ளிரவு முதல் கொத்து, ப்ரைட் ரைஸ், சோற்றுப் பொதி விலைகள் அதிகரிப்பு!
vavuniya
புதைக்கப்பட்ட சடலத்தின் தலை மர்ம நபர்களால் அகற்றம்: வவுனியாவில் சம்பவம்
america
போரில் காயமடைந்த அமெரிக்கப் படையினரின் எண்ணிக்கை அதிகரிப்பு!