உலகில் முதன்முறையாக நடத்தப்படும் மனித உருவ ரோபோ ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் சீனாவின் பீஜிங்கில் ஆரம்பமாகியுள்ளது.

நேற்று முதல் இடம்பெறும் இந்த போட்டிகள் நாளை வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சீனா, அமெரிக்கா, ஜேர்மனி, பிரேசில், ஜப்பான் உள்ளிட்ட 16 நாடுகளைச் சேர்ந்த 280 அணிகள் பங்கேற்கும் இந்த நிகழ்வில், 500க்கும் மேற்பட்ட ரோபோக்கள் பங்கேற்றுள்ளன.
தடகளம், கால்பந்து, குத்துச்சண்டை, ஜிம்னாஸ்டிக்ஸ், உள்ளிட்ட 26 விளையாட்டுகளில் அவை போட்டியிடுகின்றன.

உலகிலேயே மனித உருவ ரோபோக்கள் மட்டுமே பங்கேற்று நடைபெறும் முதல் விளையாட்டு இதுவென்பது குறிப்பிடத்தக்கது.