மூன்றாவது நபரையும் பலியெடுத்த ஓமந்தை விபத்து! பெண் தொடர்ந்து சிகிச்சையில்!

கடந்த மாதம் 26 ஆம் திகதி ஓமந்தை பகுதியில் டிப்பர் வாகனத்துடன் கார் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் படுகாயம் அடைந்திருந்த வயோதிபர் நேற்று (20) சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இந்தியாவுக்கு தல யாத்திரை மேற்கொண்டு விட்டு யாழ்ப்பாண நோக்கி கார் ஒன்றில் திரும்பிக் கொண்டிருந்த யாழ். இந்திய துணைத் தூதரகத்தின் கலாசார உத்தியோகத்தரான பிரபாகரன் சர்மா சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

அதன் பின்னர் அவரது மகனான பிரபாகரன் சர்மா அக்க்ஷய் (வயது 27) உயிரிழந்தார்.

இந்நிலையில் விபத்தில் படுகாயம் அடைந்து யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த கொழும்பு 15 ஐ சேர்ந்த துரைச்சாமிக்குருக்கள் சுவாமிநாதஐயர் (வயது 69) என்பவர் நேற்று (20) சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இவ் விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மூன்றாக உயர்ந்துள்ளது. மேலும் பிரபாகரன் சர்மாவின் மனைவி சீதாலக்‌ஷ்மி தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றார்.

youtube

Related Posts :

Special News :

Entertainment :

Special News

kovil news
டிஜிட்டல் தீர்த்தம்: கோவில் கருவறையில் தானியங்கி தீர்த்தம் வழங்கும் இயந்திரம்!
trinco issue
திருகோணமலை விகாரை விவகாரம்: ரீட் மனுவை மீண்டும் அழைக்க உத்தரவு
namal
பிரித்தானியாவில் நாமலுக்கு முட்டுக்கட்டை போட்ட தமிழ் புலம்பெயர் அமைப்புகள்!
Akuregoda gun shoot
அக்குரேகொடை இரட்டை கொலை - அடையாளம் காணப்பட்டுள்ள துப்பாக்கிதாரி!
gas issue
சமையல் எரிவாயு தட்டுப்பாடு: கடும் சிரமத்தில் நுகர்வோர்
Andrew
பிரித்தானிய மன்னரின் சகோதரர் கைது!