பெண் ஊழியரிடம் தகாத முறையில் நடந்துகொண்ட பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் வீரர்!

ஐசிசி ஆண்கள் டி20 உலகக்கோப்பை தொடருக்காக இலங்கைக்கு வருகை தந்திருந்த பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் வீரர் ஒருவருக்கு, தங்கியிருந்த விடுதியில் பெண் ஊழியர் ஒருவரிடம் தகாத முறையில் நடந்துகொண்டமைக்காக அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

கண்டி, பல்லேகலை பகுதியில் உள்ள ‘கோல்டன் கிரவுன்’ (Golden Crown) நட்சத்திர விடுதியில் பாகிஸ்தான் அணி தங்கியிருந்தபோது இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கை அணிக்கு எதிரான சுப்பர்-8 சுற்றுப் போட்டிக்கு முன்னதாக, விடுதியில் பணிபுரியும் பெண் ஊழியர் ஒருவரிடம் குறித்த வீரர் அநாகரீகமாக நடந்துகொண்டுள்ளார்.
இதனால் அச்சமடைந்த அந்தப் பெண் உதவி கோரி சத்தமிட்டதையடுத்து, ஏனைய ஊழியர்கள் அங்கு வந்து அவரை மீட்டுள்ளனர்.

இந்த விவகாரம் தொடர்பில் விடுதியின் நிர்வாகம் பாகிஸ்தான் அணியின் முகாமையாளர் நவீட் சீமாவிடம் (Naveed Cheema) முறையிட்டது.

விடுதியின் நிர்வாகம் கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்திய போதிலும், முகாமையாளர் வீரர் சார்பாக மன்னிப்பு கோரியதுடன், அவருக்கு அபராதமும் விதித்து விடயத்தை அப்போது சுமுகமாக முடித்து வைத்துள்ளார்.

குறித்த வீரரின் பெயர் விபரங்கள் இதுவரை உத்தியோகபூர்வமாக வெளியிடப்படவில்லை. இருப்பினும், பாகிஸ்தான் திரும்பியதும் அவர் அந்நாட்டு கிரிக்கெட் சபையின் ஒழுக்காற்று குழு முன்னிலையில் முன்னிலையாக வேண்டும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

பாகிஸ்தான் அணி இந்தத் தொடரில் அரையிறுதிக்குத் தகுதிபெறாமல் வெளியேறியுள்ள நிலையில், இவ்வாறான ஒழுக்கவீனச் சம்பவங்கள் அந்த நாட்டு கிரிக்கெட் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

namal rajapaksa
கிளிநொச்சியில் இளம் கலைஞர் கைது: அரசின் இரட்டை நிலைப்பாட்டைச் சாடும் நாமல் ராஜபக்ஷ!
vavuniya
மாணவர்கள் மீது கொடூரத் தாக்குதல்: வவுனியா 'சிறுவர் பாதாளக் குழு' சிக்கியது! 7 பேருக்கு நீதிமன்ற உத்தரவால் சிறுவர் இல்லத்தில் அடைப்பு!
arrest
எழுச்சி பாடல்களை பாடி சமூக ஊடகங்களில் பகிர்ந்த கிளிநொச்சி சொல்லிசை கலைஞன் கைது!
vavuniya accident
கனகராயன் குளத்தில் இடம்பெற்ற விபத்தில் முன்னாள் யாழ் மாவட்ட அரச அதிபரின் மகன் உட்பட இரு இளைஞர்கள் உயிரிழப்பு.!
chennai srilankan girl death
சென்னை கோயம்பேடு கொடூரம்: காரில் மோதி இலங்கை பெண் கொல்லப்பட்ட சம்பவத்தில் சிறுமியும் பலி
gotabaya rajapaksa
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் - கோட்டாபய உள்ளிட்ட மூவருக்கு வெளிநாட்டு பயணத்தடை