மகனின் சடலத்துடன் பைக்கையும் சேர்த்து புதைத்த பெற்றோர்! மனதை கலங்க வைக்கும் சம்பவம்!

குஜராத் மாநிலம் நாடியாத் அருகேயுள்ள உத்தரசந்தா கிராமத்தைச் சேர்ந்த கிரிஷ் பர்மர் (வயது18), எதிர்பாராத விதமாக உயிரிழந்த சம்பவம் அந்த பகுதி மக்களில் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த மே 26 ஆம் தேதி, கிரிஷ் ஆனந்த் நகரத்திற்கு கல்லூரி சேர்க்கைக்காக சென்றிருந்தார். மாலையில் வீடு திரும்பும் வழியில் அவரது பைக் ஒரு டிராக்டர் டிராலியில் மோதியது. இந்த விபத்தில் தலை மற்றும் உடலில் ஏற்பட்ட காயங்களால், 12 நாட்கள் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும், சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார்.

சமீபத்தில் 12ஆம் வகுப்பு தேர்வை முடித்த கிரிஷ், BCA படிக்கத் திட்டமிட்டிருந்தார். பைக்கை மிகுந்த அளவில் நேசித்த அவர், கார் இருந்தும் எப்போதும் பைக்கில்தான் பயணம் செய்வார் என அவரது பெற்றோர் கூறியுள்ளனர்.

கிரிஷின் விருப்பத்தை மரணத்திலும் மதிக்க வேண்டுமென எண்ணிய குடும்பத்தினர், அவரது இஷ்டமான பைக்கை கூட இறுதிச்சடங்கில் அவரோடு சேர்த்து புதைத்தனர். அவரது உடையுடன் கண்ணாடி, காலணி, ஆடைகள் மற்றும் பைக்கும் கல்லறையில் வைக்கப்பட்ட சம்பவம், அருகிலுள்ளவர்கள் அனைவரையும் நெகிழ வைத்தது.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

price
உச்சம் தொட்ட பச்சை மிளகாயின் விலை!
death
காதலன் முன்னிலையில் 17 வயது காதலி செய்த அதிர்ச்சி செயல்!
vehicle
வாகனங்களின் விலைகளில் ஏற்படவுள்ள மாற்றம்: வெளியான தகவல்!
colombo
தலைநகருக்கு வருபவர்களை கடத்தும் மர்ம கும்பல்: வெளியான அதிர்ச்சித் தகவல்
douglas devananda
முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கைது!
gold price
தங்க விலையில் ஏற்பட்ட திடீர் மாற்றம்!