துருக்கியின் இஸ்தான்புல் விமான நிலையத்தில் இருந்து இங்கிலாந்து தலைநகர் லண்டனுக்கு சென்ற விமானத்தில், திடீரென வெளியான புகை காரணமாக 4 பேருக்கு மூச்சித் திணறல் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

பிரித்தானிய ஏர்வேஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான விமானம் 142 பயணிகளுடன் பயணித்துக் கொண்டிருந்த போது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து ருமேனியா தலைநகர் புக்காரெஸ்ட் விமான நிலையத்தில் குறித்த விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
விமானம் தரையிறங்கியதும் அங்கு தயாராக இருந்த மீட்புக்குழுவினர் பயணிகளை பாதுகாப்பாக வெளியேற்றினர்.
அதன்பின் மூச்சுத் திணறல் ஏற்பட்ட 4 பயணிகளுக்கு முதலுதவி சிகிச்சை வழங்கப்பட்டதுடன் குறித்து விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகனை அந்த நாட்டு விமான போக்குவரத்து அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.