🔴 VIDEO ஈழத்தாய் பெற்ற பிள்ளையின் பாடல் பல்கலைக்கழக பாடத்தில் இணைப்பு!

கேரளத்தின் கோழிக்கோடு பல்கலைக்கழகத்தின் பாடத்தில், பிரபல ராப் பாடகரான வேடனின் பாடல் இணைக்கப்பட்டுள்ளது.

மலையாள திரையுலகில் சமீப காலமாக மிகவும் பிரபலமான ராப் பாடகர் வேடன் இருக்கிறார்.
வேற்றுமைகளுக்கும், அடக்குமுறைகளுக்கும் எதிரான வேடனின் பாடல்களுக்கு தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது!

இந்த நிலையில், வேடனின் பாடலான ‘பூமி ஞ்யான் வாழுன்ன இடம்’ – Bhoomi Njan Vazhunidam எனும் பாடல், கோழிக்கோடு பல்கலைக்கழகத்தின் மலையாள பட்டப்படிப்பின் மூன்றாம் செமஸ்டர் மாணவர்களுக்கான பாடத்தில், ஒப்பீட்டு இலக்கியத் தொகுதியாக இணைக்கப்பட்டுள்ளது.

இந்தப் பாடலை, பிரபல பாப் பாடகர் மைக்கல் ஜாக்சனின் “They Don’t Care About Us” எனும் பாடலுடன் ஒப்பிட்டு, இரண்டு பாடல்களின் வரிகள், பாடிய விதம், ஆடல்கள் ஆகியவற்றைக் குறித்து மாணவர்கள் படிப்பார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மைக்கல் ஜாக்சனின் பாடலுடன் வேடனின் பாடலை இணைக்க கடந்த மே 31 ஆம் தேதி நடைபெற்ற பல்கலைக்கழக ஆசிரியர்களின் ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதன்மூலம், வரும் கல்வியாண்டு முதல் இந்தப் புதிய பாடமானது மாணவர்களுக்கு கற்பிக்கப்படும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க:

Related Posts :

Special News :

Entertainment :

Special News

price
உச்சம் தொட்ட பச்சை மிளகாயின் விலை!
death
காதலன் முன்னிலையில் 17 வயது காதலி செய்த அதிர்ச்சி செயல்!
vehicle
வாகனங்களின் விலைகளில் ஏற்படவுள்ள மாற்றம்: வெளியான தகவல்!
colombo
தலைநகருக்கு வருபவர்களை கடத்தும் மர்ம கும்பல்: வெளியான அதிர்ச்சித் தகவல்
douglas devananda
முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கைது!
gold price
தங்க விலையில் ஏற்பட்ட திடீர் மாற்றம்!