யாழில் இளைஞனுக்கு நடந்த கொடுமை: பல மாதங்கள் ஆகியும் சந்தேக நபரை கைது செய்யாத பொலிஸ்

யாழ்ப்பாணத்தில் இளைஞன் ஒருவரை நிர்வாணமாக்கி , தாயின் கண் முன்னால் கட்டி வைத்து தாக்கிய கும்பலின் பிரதான சந்தேக நபரை 08 மாத கால பகுதி கடந்தும் பொலிஸார் கைது செய்யாது அசமந்தமாக செயற்படுவதாக பாதிக்கப்பட்ட தரப்பினரின் குற்றம் சாட்டியுள்ளனர்.

பிரதான சந்தேக நபருக்கும் வடக்கில் உள்ள பொலிஸ் உயர் அதிகாரிகளுக்கும் இடையில் மிக நெருங்கிய தொடர்புகள் காணப்படுவதனால் , பொலிஸார் அந்நபரை கைது செய்ய நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் , சில பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் அந்நபரை கைது செய்ய முயற்சித்த வேளையிலும் , உயர் அதிகாரிகளின் அழுத்தம் காரணமாக அந்நபரை கைது செய்யவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் , தமது நலன் சார்ந்து மூத்த சட்டத்தரணி ஒருவரை நியமித்து, அவரூடாக யாழ் . நீதவான் நீதிமன்றில் குறித்த வழக்கினை நகர்த்தல் பத்திரம் ஊடாக விசாரணைக்கு எடுத்து , பொலிஸார் பிரதான சந்தேக நபரை 08 மாத காலம் கடந்து கைது செய்யாது , அசமந்தமாக செயற்படுவதாக மன்றின் கவனத்திற்கு கொண்டு வந்தனர்.

அதனை அடுத்து குறித்த சந்தேகநபரை இதுவரையான கால பகுதி வரையில் கைது செய்யாதமைக்கான காரணம் தொடர்பில் மன்றிற்கு அறிக்கை சமர்ப்பிக்குமாறு நீதிமன்று பொலிஸாருக்கு கட்டளையிட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

இரு குடும்பங்களுக்கு இடையிலான பிரச்சனையில் கடந்த ஜனவரி மாதம் 20ஆம் திகதி இணுவில் பகுதியை சேர்ந்த இளைஞனை அவரது தாய்க்கு முன்னால் ஆடைகளை களைந்து நிர்வாணமாக்கி , சித்திரவதை புரிந்து கட்டி வைத்து மிக மோசமான முறையில் தாக்குதல்களை மேற்கொண்டுள்ளனர்.

சித்திரவதை மற்றும் தாக்குதல்களை மேற்கொள்ளும் போது , தாக்குதலாளிகள் அவற்றை கையடக்க தொலைபேசியில் வீடியோ மற்றும் புகைப்படங்களை எடுத்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ள நிலையில், சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தில் சுமார் 15 வரையில் பொலிஸார் அடையாளம் கண்டு கொண்டனர்.

அவர்களில் ஒரு சிலரை மாத்திரம் கைது செய்து வழக்கு விசாரணைகளை தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர்.

சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் உள்ளிட்ட ஏனைய சந்தேகநபர்களை பொலிஸார் 08 மாத கால பகுதி கடந்தும் இதுவரையில் கைது செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

New Project t (2)
தென்னிலங்கையை உலுக்கிய துப்பாக்கிச் சூட்டில் அதிகரிக்கும் பலி எண்ணிக்கை!
New Project t (1)
ஜனாதிபதியை குறிவைத்து பரப்பப்படும் தகவல்கள்: சி.ஐ.டியில் முறைப்பாடு!
New Project t
நல்லூருக்கு செல்வோருக்கு பொலிஸார் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!
varalakshmi-poojai
வரலட்சுமி நோன்பு: செல்வ வளம் தரும் 3 புனிதப் பொருட்களின் தெரியுமா?
vavuniya-thump
அகில இலங்கை முய் தாய் போட்டிகளில் தேசிய மட்டத்தில் வவுனியா விபுலானந்தா கல்லூரி மாணவிகள் சாதனை: அபுதாபியில் நடைபெறும் போட்டிக்கும் தெரிவு
New Project t (3)
இலங்கையிலுள்ள சீனர்களுக்கு சீனத் தூதரகம் விடுத்துள்ள முக்கிய அறிவுறுத்தல்!