தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 15 பேரின் எழுத்து மூலமான அவசர வேண்டுகோளின் பெயரில் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க இன்று அவசரமாகச் சந்திக்கவுள்ளார்.

மன்னார் மாவட்டத்தில் அமைக்கப்படும் காற்றாலை மின் கோபுரங்கள் தொடர்பில் தமிழ் பேசும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 15 பேர் ஒப்பமிட்டு ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளனர்.
குறித்த கடிதம் தொடர்பில் ஆராயவே இந்த அவசர சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியில் இன்று மதியம் 2 மணிக்கு இந்த அவசர சந்திப்பு நடைபெறவுள்ளது.
இதற்கு கடிதத்தில் ஒப்பமிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாத்திரமின்றி கடித்ததில் ஒப்பமிடாத வடக்கு, கிழக்கு நாடாளுமன்ற உறுப்பினர்களும், மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த ஐந்து சிவில் சமூகச் செயற்பாட்டாளர்களும் அழைக்கப்பட்டுள்ளனர்.
இந்தச் சந்திப்புக்கு மன்னார் காற்றாலையுடன் தொடர்புடைய திணைக்கள அதிகாரிகளும் அழைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.