கட்டார், ஜசீரா ஏர்வேஸ் இலங்கைக்கான விமான சேவைகளை நிறுத்தின!

இலங்கை மற்றும் மத்திய கிழக்கு நாடுகளின் இரு முக்கிய நாடுகளுக்கு இடையிலான விமான சேவைகள் இன்று செவ்வாய்க்கிழமை (24) காலை 5.00 மணி முதல் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக விமான நிலைய அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

குவைத் நாட்டிலிருந்து இருந்து இயங்கும் கட்டார் ஏர்வேஸ் மற்றும் ஜசீரா ஏர்வேஸ் ஆகிய இரண்டு விமான சேவைகளும் தங்கள் சேவைகளை தற்காலிகமாக நிறுத்தியுள்ளதாக கொழும்பு – கட்டுநாயக்க பண்டாரநாயக்க விமான நிலையத்தின் அதிகாரி தெரிவித்துள்ளார்.

கட்டாருக்குள் அமைந்துள்ள அமெரிக்க இராணுவ தளங்கள் மீது ஈரான் நடத்திய தாக்குதலைத் அடுத்த, கட்டார் அரசாங்கம் அதன் வான் வெளியை மூடியது. இதனை அடுத்து விமான சேவைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன.

இதனால், கொழும்பு – கட்டுநாயக்க பண்டாரநாயக்க விமான நிலையதிலிருந்து கட்டாரின் தலைநகர் டோஹா மற்றும் குவைத்தின் தலைநகர் குவைத் நகரம் ஆகியவற்றுக்கான விமான சேவைகள் மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தப்பட்டுள்ளன.

மத்திய கிழக்கு மற்றும் ஐரோப்பிய நாடுகளிலிருந்து வரும் விமானங்கள் திட்டமிட்டபடி இயக்கப்படுகின்றன எனவும், இதுவரை எந்த இடையூறும் ஏற்படவில்லை என்றும் அந்த அதிகாரி மேலும் குறிப்பிட்டார்.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

semmani
செம்மணியில் புதைக்கப்பட்ட தமிழர்களுக்கு நீதிகோரி மதுரையில் வெடித்த போராட்டம்!
hief
நவாலியில் களவாடப்பட்ட ஐம்பொன் விக்கிரகம்!
77e98751-ec05-4949-8ca7-d07aa8aec61b
முள்ளிவாய்க்காலில் தேர் திருவிழாவுக்கு சென்ற பெண்ணுக்கு நேர்ந்த கதி!
New Project t (3)
குப்பை தொட்டியில் இருந்து மீட்கப்பட்ட வர்த்தகரின் உடல்: நடந்தது என்ன?
IMG_5048
பாடசாலை சுற்றுலாவுக்கு அழைத்துச் செல்லவில்லை: போராட்டத்தில் குதித்த பாடசாலை மாணவன்!
news
மனைவி மற்றும் மாமியாரை கத்தியால் குத்திவிட்டு கிணற்றில் குதித்த கணவன்!